ஐபிஎல் தொடர் துவங்கி கிட்டத்தட்ட 15 போட்டியில் முடிவடைந்துவிட்டன. தற்போது வரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இதற்கு அந்த அணியின் பேட்டிங் தான் காரணம் குறிப்பாக வீரர்கள் சரியாக ஆடவில்லை.
முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவர் முதல் மூன்று போட்டிகளிலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருப்பினும் அந்த அணியால் சரியாக செயல்பட முடியவில்லை குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷேன் வாட்சன் பத்து ரன்கள் கூட எடுப்பதில்லை. ஒரு துவக்க வீரர் நன்றாக ஆட விட்டால் அதற்கு அடுத்து வரும் மிடில் ஆடர் வீரர்கள் அழுத்தத்தை சந்திப்பார்கள்.
இந்த விஷயத்தை வாட்சன் தானாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார் வாட்சன். இதுகுறித்து அவர் கூறுகையில்… துவக்கத்தில் நான் அதிரடியாக விளையாடி ரன்களை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மிடில் ஆர்டரில் வரும் வீரர்கள் மீது நாங்கள் அதிக அழுத்தத்தை கொடுக்கும். நாங்கள் சிறப்பாக செயல்படாத போது அவர்கள் தான் ஆட்டத்தை கையிலெடுக்க வேண்டும்.
அந்த நேரத்தில் அவர்கள் மீது அதிக அழுத்தம் இருக்கிறது. அவர்கள் போட்டியை சரியாக கொண்டு போக முடியாது. அதற்கு நாங்களும் தான் காரணம் ஒரு தொடக்க வீரராக நானே இதனை ஒப்புக் கொள்கிறேன்.
தொடர் போகிற போக்கில் இதனை எல்லாம் சரி செய்து கொள்ள வேண்டும். நாங்கள் இதைத்தான் தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் மிகச் சிறப்பாக கூர்மையாக செயல்பட வேண்டும். தொடக்கம் சரியாக இருக்க வேண்டும் என்ற கவனத்துடன் நாங்கள் ஆடினால் ஆட்டம் எங்கள் பக்கம் வெற்றி வர தொடங்கும் என்று தெரிவித்திருக்கிறார் ஷேன் வாட்சன்.