வீடியோ : உங்களோட ஜெர்ஸிய தருவீங்களா? வார்னரிடம் கோரிக்கை வைத்த குட்டி ரசிகர் – அதற்கு வார்னர் அளித்த க்யூட் ரிப்ளை

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து புதிய சரித்திரம் படைத்தது. அதைத்தொடர்ந்து அங்கேயே இருக்கும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நவம்பர் 17ஆம் தேதியன்று துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடந்த டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

புகழ்பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 287/9 ரன்கள் எடுத்தது. ஜேசன் ராய், கேப்டன் ஜோஸ் பட்லர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் மாலன் சதமடித்து 12 பவுண்டரின் 4 சிக்ஸருடன் 134 (128) ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 288 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 86 (84), டிராவிஸ் ஹெட் 69 (57), ஸ்டீவ் ஸ்மித் 80* (78) என டாப் 3 பேட்ஸ்மேன்களே தேவையான ரன்களை அதிரடியாக குவித்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

குட்டி ரசிகரின் கோரிக்கை:

முன்னதாக டி20 உலக கோப்பையில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக கோப்பை தக்க வைக்க தவறிய தங்களது அணிக்கு அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமான ஆஸ்திரேலிய ரசிகர்கள் வழக்கமான ஆதரவை கொடுத்தனர். அதில் 86 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்த பின் ஆட்டமிழந்த நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் பெவிலியனில் அமர்ந்திருந்த போது மைதானத்தில் இருந்த ஒரு குட்டி ரசிகர் “உங்களுடைய டி ஷர்ட்டை தர முடியுமா” என்று சிறிய பேப்பரில் எழுதி சிரித்த முகத்துடன் கோரிக்கை வைத்தார்.

அதை கவனித்த கேமரா மேன் டேவிட் வார்னர் பார்க்கும் அளவுக்கு போகஸ் செய்து கவனத்தை ஈர்த்தார். அதை பார்த்து டேவிட் வார்னர் புன்னகை செய்த நிலையில் அருகில் இருந்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் நீங்கள் போட்டிருக்கும் ஜெர்சியை கழற்றி கொடுக்குமாறு அவரிடம் சேட்டை செய்தார். ஆனால் உள்ளே பனியன் போன்ற வேறு எந்த ஆடையும் அணியாத காரணத்தால் புன்னகை மட்டும் செய்த டேவிட் வார்னர் தம்மை கலாய்த்த “மார்னஸ் லபுஸ்ஷேனிடம் ஒரு ஜெஸ்ஸியை கேட்டு வாங்குங்கள்” என்று பேப்பரில் எழுதி பெவிலியனிலிருந்து அந்த ரசிகருக்கு நேரலையில் பதிலளித்தார்.

- Advertisement -

அதை பார்த்த அந்த குட்டி ரசிகர் உடனடியாக தனது தந்தை போன்ற ஒருவரின் உதவியுடன் மற்றுமொரு பேப்பரில் “மார்னஸ் உங்களுடைய டி ஷர்ட்டை கொடுப்பீர்களா” என்று மீண்டும் ஒரு கோரிக்கை வைத்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த டேவிட் வார்னர் வாருங்கள் பெவிலியனுக்கு வந்து அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்ற வகையில் சைகை செய்தார். அப்படி நேரலையில் தொலைக்காட்சியின் வாயிலாக குட்டி ரசிகரும் ஆஸ்திரேலிய வீரர்களும் செய்த இந்த மனதை கவரும் செயல் அனைவரையும் ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலானது.

இருப்பினும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த குட்டி ரசிகருக்கு உதவ முடியாத டேவிட் வார்னர் விரைவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவருக்கு தம்முடைய ஜெர்சியை பரிசளிப்பேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார். அதாவது வரும் டிசம்பர் 8 – 12 ஆகிய தேதிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இதே அடிலெய்ட் மைதானத்தில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி நடைபெறுகிறது.

இதையும் படிங்க : IND vs NZ : இந்தியா நியூசிலாந்து முதலாவது டி20 போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – இப்படியா நடக்கனும்?

அப்போது மீண்டும் இங்கு வரும் போது அந்த ரசிகருக்கு கேட்டது போலவே ஜெர்சியை கொடுப்பேன் என்று டேவிட் வார்னர் உறுதியளித்துள்ளது இதர ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைக்கிறது.

Advertisement