IND vs NZ : இந்தியா நியூசிலாந்து முதலாவது டி20 போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – இப்படியா நடக்கனும்?

Ground
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று முதல் நடைபெற இருக்கிறது. நவம்பர் 18-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடரானது நவம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கும் வேளையில் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது வெலிங்டன் நகரில் உள்ள ஸ்கை ஸ்டேடியம் மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. இந்திய நேரப்படி சுமார் 12 மணிக்கு டாஸ் போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வெலிங்டன் நகரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தற்போது டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த வெதர் ரிப்போர்ட்டின் அடிப்படையில் இன்று வெலிங்டன் நகரில் மழை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டதால் போட்டி இன்று நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மைதானத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தற்போது மைதானமானது முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

Rain

மழை நின்று போட்டி நடைபெறும் என்று எதிர்பார்த்தாலும் அவுட் ஃபீல்டு காய்வதில் நேரம் பிடிக்கும் என்பதனால் இன்றைய போட்டி நடைபெறும் என்று உறுதியாக கூற முடியாது. அப்படி ஒருவேளை மழை காரணமாக இந்த போட்டி நடைபெறாமல் போனால் அடுத்ததாக வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிதான் தொடரை கைப்பற்றும்.

- Advertisement -

ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் தொடரின் கோப்பையானது இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பெற்ற தோல்வியை அடுத்து தற்போது பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு மழை பெய்து தற்போது இந்த போட்டி நடைபெறாமல் போனால் அது ஏமாற்றத்தையே தரும் என்பது நிதர்சனமான உண்மை.

இதையும் படிங்க : நீங்க பேட்டிங்ல மட்டும் கவனத்தை செலுத்துங்க. உங்களுக்கு கேப்டன்ஷிப் தேவையில்லை – ஷாஹித் அப்ரிடி விளாசல்

முற்றிலும் இளம்வீரர்களை கொண்டே இந்திய அணி இந்த தொடரில் விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement