குட்டி ரசிகையின் அன்பு பரிசை உடனே வாங்கிக்கொண்ட விராட் கோலி கண் கலங்க தந்தை – ரசிகர்கள் நெகிழ்ச்சி

Virat Kohli Fans
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2019க்குப்பின் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து முன்னேறும் மறுமலர்ச்சி வெற்றியை கண்டுள்ளது. ஆனால் சோதனை என்ற பெயரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்த அந்த போட்டியில் இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் சொதப்பியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

குறிப்பாக உலக கோப்பைக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் இன்னும் சோதனைகளை செய்து கொண்டிருக்கும் இந்தியா பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியிடமே இவ்வளவு திணறினால் முதன்மையான போட்டிகளில் எவ்வளவு திண்டாட போகிறதோ என்பதை நினைத்து இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக 90/0 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் அதன் பின் சீட்டுக்கட்டு சரிவது போல விக்கெட்டுகளை இழந்த இந்தியா 181 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

குட்டி ரசிகையின் பரிசு:
மறுபுறம் இந்த படுதோல்வியை பெவிலியனிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி இடையிடையே இந்திய வீரர்களுக்காக கூல்டிரிங்ஸ் தூக்கி உதவி செய்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இறுதியாக அந்த போட்டி முடிந்ததும் நம்மை பார்ப்பதற்காக காத்திருந்த ரசிகர்களை நேரடியாக அருகில் சென்று விராட் கோலி சந்தித்தார். குறிப்பாக சிறியவர் முதல் பெரியவர் வரை அடங்கிய ஒரு குடும்பத்தை விராட் கோலி மிகவும் அருகே சென்று நேரடியாக சந்தித்தார்.

அப்போது அங்கிருந்த இளம் சிறுமி உங்களுக்காக ஒரு பரிசு வைத்திருக்கிறேன் என்று தமது கையால் செய்த பிரேஸ்லெட்டை விராட் கோலியிடம் அன்பாக கொடுத்தார். அதற்கு “ஓ அப்படியா” என்று பதிலளித்த விராட் கோலி சிரித்த முகத்துடன் அதை வாங்கி “நான் இதை போட்டுக் கொள்ளட்டுமா” என் கேட்டு உடனடியாக தன்னுடைய கையில் அணிந்து அந்த ரசிகையின் அன்பிற்கு மதிப்பளித்து நெகிழ்ச்சியுடன் நடந்து கொண்டார். அத்துடன் அவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிய விராட் கோலி சிறியவர் முதல் பெரியவர் வரை இருந்த அந்த குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

- Advertisement -

அப்படி தம்முடைய குழந்தை கொடுத்த பரிசை வாங்கி விராட் கோலி அணிந்து கொண்டதை சற்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்த அந்த தந்தை கலங்கிய கண்களுடன் பேசியது பின்வருமாறு. “இது எங்களுடைய குடும்பம் மீண்டும் ஒன்றான தருணமாகும். கிரிக்கெட்டை மிகவும் விரும்பும் எங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் இங்கிருப்பது மிகவும் சிறந்த தருணமாகும். அந்த சமயத்தில் என்னுடைய மகள் கொடுத்த பிரேஸ்லெட்டை அவர் வாங்கிக் கொண்டது அழகாக இருந்தது. குறிப்பாக எங்கள் முன் அவர் அதை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்தது என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது” என்று கூறினார்.

அதே போல தம்முடைய அன்பு பரிசை விராட் கோலி வாங்கியதை பற்றி அந்த குட்டி ரசிகை பேசியது பின்வருமாறு. “நான் கோலி என்று கத்தினேன். அதனால் என்னை பார்க்க வந்த அவரிடம் என் கைகளால் செய்த பிரேஸ்லெட்டை கொடுத்தேன்” என்று கூறினார். முன்னதாக டெஸ்ட் தொடரின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஸ்வா டா சில்வா அம்மா விராட் கோலியிடம் வெளிப்படுத்திய பாசத்திற்கு நிகராக இந்த தருணமும் அமைந்தது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:IND vs WI : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏன் விளையாடவில்லை – பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

அதே போல சூரியகுமார் யாதவ் கேப்டன் ரோகித் சர்மா போன்ற இந்திய வீரர்களும் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதை தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement