IND vs WI : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏன் விளையாடவில்லை – பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

Dravid
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Hope

- Advertisement -

இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏன் விளையாடவில்லை? என்பது குறித்து நேற்றைய போட்டி முடிந்து இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெளிவான விளக்கம் ஒன்றினை கொடுத்திருந்தார். இந்த தொடரில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதில் இந்திய அணி வீழ்த்திருந்தாலும் அந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பின்வரிசையில் களமிறங்கும்படி தங்களது பேட்டிங் பொசிஷன்களை மாற்றிக்கொண்டனர்.

அதேவேளையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அவர்கள் இருவரும் விளையாடாதது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் அவர்கள் இருவரும் ஏன் விளையாடவில்லை என்பது குறித்து பேசிய ராகுல் டிராவிட் கூறுகையில் : எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு முன்பாக இதுதான் எங்களது அணியில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கக்கூடிய கடைசி தொடர்.

Rohit-and-Kohli

இதன் காரணமாகவே நாங்கள் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளித்து அணியில் உள்ள மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் செயல்பாடுகளை சோதிக்க விரும்பினோம். அதோடு தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் வீரர்களும் விரைவில் அணிக்கு திரும்ப இருக்கும் வேளையில் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்கள் மட்டுமே உள்ளன.

- Advertisement -

எனவே இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எங்கள் அணியில் உள்ள மற்ற வீரர்களின் செயல்திறனை வெளிக்கொணரவே இது போன்ற வாய்ப்புகளை நாங்கள் கொடுக்கிறோம். இன்னும் ஒரு சில மாதங்களில் உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளதால் அதற்கு முன்னர் இதுபோன்ற சோதனைகள் நமது அணிக்கு தேவையான ஒன்றுதான் என டிராவிட் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : எல்லாம் பணத்திமிர், ஈகோ தான் காரணம் விடுங்க – ஆதங்கப்பட்ட கவாஸ்கருக்கு ஆறுதலுடன் இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

இருப்பினும் எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்த உலககோப்பை தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து தங்களது வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement