ஆசியக்கோப்பை பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட விராட் கோலி

Virat Kohli Babar Azam
- Advertisement -

ஆசிய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. வரலாற்றில் 15ஆவது முறையாக நடைபெறும் இந்த தொடர் விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் டி20 தொடராக நடைபெறுகிறது. இந்த தொடரில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் கடைசியாக 2018இல் இதே துபாயில் நடைபெற்ற தொடரில் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாகவும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. அவரது தலைமையில் கடந்த டி20 உலக கோப்பைக்குப்பின் பங்கேற்ற அத்தனை தொடர்களிலும் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வெல்லும் என்று பலரும் கணித்து வருகிறார்கள்.

இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்றாலும் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போதும் போட்டிக்கு தான் உலகம் முழுவதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் பெரும்பாலான போட்டிகளில் அனல் பறக்கும் என்ற நிலைமையில் கடைசியாக இதே துபாய் மைதானத்தில் மோதிய போது உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது.

- Advertisement -

விராட் – பாபர்:
அதே போல் இம்முறையும் தோற்கடிப்போம் என சவால் விடுத்து வரும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வருகிறது. முன்னதாக இந்த தொடரில் பங்கேற்பதற்காக தனி விமானம் வாயிலாக துபாய் சென்றடைந்த இந்தியா தற்போது அங்கு தீவிர வலை பயிற்சியை துவங்கியுள்ளது. துபாயில் இருக்கும் ஐசிசி அகடமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பயிற்சியின் போது பாகிஸ்தான் அணியினரும் அருகில் இருக்கும் மைதானத்தில் பயிற்சியை துவங்கியுள்ளனர்.

அப்போது இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலியும் பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாமும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கைகொடுத்து ஒருசில நிமிடங்கள் மனம்விட்டு மகிழ்ச்சியுடன் பேசினர். கடந்த 10 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையில் ரன் மெஷினாக 23000 ரன்களையும் 70 சதங்களையும் விளாசி உச்சகட்ட சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் விராட் கோலியும் கடந்த 2019 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு அவரையும் மிஞ்சி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் உச்சபட்ச சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பாபர் அசாமும் சந்தித்த கொண்ட தருணத்தை பார்த்த இருநாட்டு ரசிகர்களும் தற்போது அதை சமூக வலைதளங்களில் கொண்டாடி ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

தெறிக்கும் சிக்ஸர்கள்:
என்னதான் கடந்த வருடம் இந்தியாவை தோற்கடித்திருந்தாலும் அந்த போட்டியின் முடிவிலேயே இருநாட்டு வீரர்களும் நட்பு பாராட்டி கொண்டதை யாரும் மறக்க முடியாது. அந்த நிலைமையில் கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினம்தோறும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் கோலிக்கு “இதுவும் கடந்து போகும், உறுதியோடு இருங்கள்” என சமீபத்தில் ட்வீட் போட்டு பாபர் அசாம் மிகப்பெரிய ஆதரவை வழங்கினார். அப்போது முதல் நிறைய பாகிஸ்தான் ரசிகர்களும் விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அதற்கு ஏற்கனவே நன்றியை பதிலளித்திருந்த விராட் கோலி தற்போது நேரில் பார்த்தபோது தாமாக சென்று கையை கொடுத்து நன்றி தெரிவித்தது பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் ரசித் கான் போன்ற ஆஃப்கானிஸ்தான் வீரர்களையும் இந்திய அணியினர் இந்த வலை பயிற்சியின் போது சந்தித்து பேசினர்.

- Advertisement -

அதை தொடர்ந்து பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் ரன்களை அடிக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க விடாமல் காலத்தை தள்ளுவீர்கள் என்ற வகையில் தன்னை அணியிலிருந்து நீக்குமாறு கோரிய விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்க தீவிரமான வலை பயிற்சியை விராட் கோலி தொடங்கியுள்ளார்.

கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடத் தொடங்கிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டாகி குறைவான ரன்களும் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அரைசதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : ரோஹித் நீங்க 2 நாளைக்கு முன்னாடி இதை மட்டும் பண்ணுங்க. பாகிஸ்தான் டீமே பயப்படும் – கைப் ஓபன்டாக்

அதனால் ஏற்பட்டுள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் அவர் இந்த வலைப்பயிற்சியில் அதிரடியான சிக்ஸர்களை பறக்கவிட்டு தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை சிக்ஸர்களாக பறக்கவிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement