வீடியோ : ஒன்னா ரெண்டா – ஒரே வீரரின் பல கேட்ச்களை விட்டு இந்தியாவுக்கு பாதகத்தை ஏற்படுத்திய விராட் கோலி

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் டிசம்பர் 22ஆம் தேதியன்று தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 227 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ராகுல் 20, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் ரிஷப் பண்ட் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். அதனால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் மீண்டும் இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

சொதப்பிய விராட் கோலி:
அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73, ஜாகிர் ஹசன் 51, நுருள் ஹசன் 31, தஸ்கின் அஹமத் 31 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 146 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியா எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருநாள் தொடரில் தோல்வியை பரிசளித்த மெஹதி ஹசன் சுழலில் சிக்கிய சுப்மன் கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். அதற்கு முன்பாக ராகுலும் 2 ரன்னில் நடையை கட்டியதால் 3வது நாள் முடிவில் 45/4 என்ற நிலையில் தடுமாறும் இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் தேவைப்படுகிறது.

இதனால் இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்துள்ள நிலையில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2022 ஆசியக் கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் சதமடித்து பார்முக்கு திரும்பி நடைபெற்ற முடிந்த வங்கதேச ஒருநாள் தொடரில் 1214 நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதமடித்து நிம்மதி பெருமூச்சு விட்டார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் சதமடிக்காமல் இருந்து வரும் கதைக்கு இந்த வருடம் இந்தியா பங்கேற்ற இந்த கடைசி போட்டியில் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இன்னிங்ஸ் 24 ரன்களில் அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.

- Advertisement -

அதனால் அவருடைய டெஸ்ட் சதம் கனவு அடுத்த வருடத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அதை விட இப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் சற்று அதிரடியாக விளையாடிய வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் 7 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்து 146 ரன்கள் இலக்கை நிர்ணயிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால் மிகவும் குறைவான ரன்களில் இருந்த போது அக்சர் படேல் வீசிய பந்தில் அவர் கொடுத்த 2 கேட்ச்களை முதல் ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலி கோட்டை விட்டார். அத்துடன் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்துகளிலும் லிட்டன் தாஸ் கொடுத்த 1 கேட்ச்சை விராட் கோலி நழுவ விட்டார்.

இதையும் படிங்க: அந்த வேலைக்கு ஒரு நல்ல ஆள் இல்லையா? விளையாடுவதற்கு முன்பே பெங்களூரு அணியை கலாய்த்த இங்கி வீரர் – நடந்தது என்ன

அவை அனைத்துமே வேகமான வேகத்தில் வந்தது என்றாலும் முதல் ஸ்லீப் பகுதியில் அப்படித்தான் வரும் என்றும் அதனாலேயே அங்கு விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த பீல்டர் நிறுத்தப்பட்டார் என்பதையும் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த 4 கேட்ச்களையும் விராட் கோலி தவற விட்டதை பயன்படுத்திய லிட்டன் தாஸ் 73 ரன்கள் குவித்து இந்தியாவை வருந்த வைத்து விட்டார். ஏனெனில் அந்த ரன்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தியா 100 ரன்களுக்கும் குறைவான இலக்கை இன்றே சேசிங் செய்து எளிதாக வென்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement