விரிசலை நல்லா பாத்துக்கோங்க, ஒன்றாக கட்டிப்பிடிச்சு இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய விராட் – ரோஹித் சர்மா

VIrat Kohli Rohit Sharma
- Advertisement -

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இலங்கையை அவர்களுடைய சொந்த ஊரிலேயே 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது. கொழும்பு நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றுமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 49.1 ஓவரில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 53 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக துணித் வெல்லாலகே 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதை தொடர்ந்து 214 ரன்களை துரத்திய இலங்கை ஆரம்பம் முதலே இந்தியாவில் சிறப்பான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 41.3 ஓவரில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு நிசாங்கா 6, கருணரத்னே 2, குசால் மெண்டிஸ் 15, சமரவிக்ரமா 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் போராடிய வெல்லாலகே 42* ரன்களும் டீ சில்வா 41 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

விரிசலை பாருங்க:
மறுபுறம் பந்து வீச்சில் நேர்த்தியாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றி இருந்தாலும் அதிரடியாக 53 (48) ரன்கள் எடுத்து 213 ரன்கள் குவிப்பதற்கு நல்ல அடித்தளமிட்ட கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக இந்த போட்டியில் வெற்றியை பெற போராடுவதற்காக நங்கூரத்தை போட முயன்ற இலங்கை கேப்டன் தாசன் சனாக்கா நிதானமாக விளையாட முயற்சித்த போதிலும் ரவீந்திர ஜடேஜா வீசிய 26வது ஓவரின் முதல் பந்திலேயே எட்ஜ் கொடுத்தார். அதை பிடிப்பதற்காகவே முதல் ஸ்லிப் பகுதியில் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா தம்மை நோக்கி வந்த பந்தை மிகச் சரியாகப் பின்பற்றி கிட்டத்தட்ட தரையோடு தரையாக தாவி அபாரமான கேட்ச் பிடித்தார்.

- Advertisement -

அப்போது இந்திய வீரர்கள் அதை கொண்டாட துவங்கிய நிலையில் விராட் கோலி ஓடிவந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கொண்டாடியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக கேப்டன்ஷிப் விவாகரத்தில் இருவருக்கும் சண்டை விரிசல் என கடந்த காலங்களில் பலமுறை ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் அதை அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். அதை மேலும் மறுக்கும் வகையில் இந்த தருணம் அமைந்தது என்றே சொல்லலாம்.

அதிலும் சாதாரணமாகவே விக்கெட் விழுந்தால் அதை எதிரணிகளை மிரட்டும் வகையில் வெறித்தனமாக கொண்டாடக்கூடிய விராட் கோலி அந்த ரோகித் சர்மா மட்டும் நின்ற வாக்கில் இருந்திருந்தால் அவரது இடுப்பிலேயே ஏறி கட்டிப்பிடித்து கொண்டாடியிருப்பார் என்று சொல்லலாம். அந்த வகையில் இந்திய பேட்டிங் துறையின் இரு துருவங்களாகவும் முன்னாள் இந்நாள் கேப்டன்களாகவும் திகழும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மிகவும் அன்பாக கட்டுப்படுத்தி வெற்றியை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement