பேசாம சட்டையையும் கழற்று – ஆஸ்கரை மிஞ்சிய வங்கதேச வீரர்களை கடுமையாக விமர்சித்த விராட் கோலி, ராகுல்

Virat Kohli Ban Players
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியா டிசம்பர் 22ஆம் தேதியன்று துவங்கிய 2வது போட்டியில் களமிறங்கியுள்ளது. தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சில் 227 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 10, சுப்மன் கில் 20, புஜாரா 24, விராட் கோலி 24 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 94/4 என தடுமாறியது. இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அதிரடியாக 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரிஷப் பண்ட் சதத்தை நழுவ விட்டாலும் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 87 ரன்களும் குவித்து இந்தியாவை மீட்டெடுத்தார்கள். அடுத்த வந்த வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு அவுட்டானது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

கடுப்பான விராட் கோலி:
அதை தொடர்ந்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம் 7/0 என்ற நிலையில் இருந்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் 2வது நாள் முடிவில் விக்கெட்டை விடக்கூடாது என்பதற்காக வங்கதேச தொடக்க வீரர் நஜ்முல் சாண்டோ செய்த வேலை தான் இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது. ஏனெனில் 2வது நாள் மாலையில் இந்தியா ஆல் அவுட்டான நிலையில் கடைசி 6 ஓவர்களை மட்டும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை வங்கதேசத்துக்கு ஏற்பட்டது.

அப்போது விக்கெட்டை விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தை பேட்டிங்கில் காட்டாமல் தன்னுடைய பேட் சரியாக இல்லை என்று அம்பையரிடம் தெரிவித்த வங்கதேச வீரர் சாண்டோ வேறு பேட்டை தேர்வு செய்வதற்கு அனுமதி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு நடுவரும் அனுமதி வழங்கிய நிலையில் பெஞ்சில் இருந்த மற்றொரு வங்கதேச வீரர் 3 – 4 பேட்டுகளை தூக்கிக் கொண்டு மைதானத்திற்குள் வந்தார். அப்போது ஆஸ்கர் நடிப்பை மிஞ்சும் அளவுக்கு அதில் ஒவ்வொன்றாக எடுத்து எது சரியாக இருக்கிறது என்று பேட்டிங் செய்து சோதித்து பார்த்த நஜ்முல் சாண்டோ கொண்டு வந்த அனைத்து பேட்டையும் ஒரு ரவுண்டு சோதித்துப் பார்த்தார்.

- Advertisement -

ஆனால் கதையில் ட்விஸ்ட் என்னவெனில் கடைசியில் ஏற்கனவே விளையாடிக் கொண்டிருந்த பேட்டை தேர்வு செய்த அவர் புதிதாக கொண்டு வரப்பட்ட எந்த பேட்டையும் தேர்ந்தெடுக்காமல் கூலாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்து நேரத்தை கடத்தினார். அதை பக்கத்திலிருந்து கவனித்து கொண்டிருந்த இந்திய கேப்டன் கேஎல் ராகுல் “என்னய்யா அதே பேட்டை தேர்வு செய்துள்ளாய் அப்படி என்றால் நேரத்தை கடத்துவதற்காக இந்த வேலை செய்தாயா” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார்.

இதையும் படிங்கசி.எஸ்.கே அணி ரஹானேவை வாங்க காரணமே இதுதானாம். இதை கவனிச்சீங்களா? – செம பிளான் தான்

பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மாலை நேரங்களில் நேரத்தை கடத்துவதற்காக வேண்டுமென்றே சில வீரர்கள் இவ்வாறு செயல்படுவது வழக்கமாகும். அந்த வகையில் செயல்பட்ட சண்டோவின் ஆஸ்கர் விருது வெல்லும் நடிப்பை பார்த்த ரசிகர்கள் நீங்கள் வேண்டுமானால் 2வது நாள் மாலை நேரத்தில் மட்டும் தப்பியிருக்கலாம். ஆனால் இந்த போட்டியில் சந்திக்கும் தோல்வியிலிருந்து தப்ப முடியாது என்று சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள். அதே போலவே வங்கதேசம் தற்போது 84/4 என தோல்வியை நோக்கி பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement