சி.எஸ்.கே அணி ரஹானேவை வாங்க காரணமே இதுதானாம். இதை கவனிச்சீங்களா? – செம பிளான் தான்

Rahane
- Advertisement -

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் டிசம்பர் 23-ஆம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு 2023-ல் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது நடைபெற்ற வேளையில் இந்த ஏலத்தில் பங்கேற்ற அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் தேர்வு செய்தது. இந்த மினி ஏலமானது வழக்கத்தை விட இம்முறை கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

Rahane 1

- Advertisement -

அந்த வகையில் சென்னை அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சில குறிப்பிட்ட வீரர்களை சென்னை அணி வாங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த வகையில் இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேனான அஜிங்க்யா ரகானாவை சென்னை அணி வாங்கியது பெருமளவு விமர்சனத்தை எழுப்பியது.

ஏனெனில் எப்பொழுதுமே வயது முதிர்ந்த வீரர்களை வாங்கும் அணியாக பார்க்கப்படும் சென்னை அணி இம்முறையும் 34 வயதான ரஹானேவை அணியில் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Rahane

ஆனால் இப்படி சிஎஸ்கே அணி ரகானேவை வாங்கியதற்கு மற்றொரு காரணம் உள்ளது என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இம்முறை ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெறுவதால் சென்னை அணி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பாதி போட்டிகளையும் வெளியில் சென்று பாதி போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இப்படி சேப்பாக்கம் மைதானத்தில் நமது அணி விளையாட இருக்கும்போது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் துவக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தால் மிடில் ஆர்டரில் மைதானத்தின் தன்மையை கணித்து நிதானமாக அணியின் ரன் குவிப்பை உயர்த்தவும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியாமல் பார்த்துக்கொள்ள நிலைத்து நின்று விளையாட ஒரு வீரர் தேவை.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : 6வது கோப்பையுடன் மாஸ் கம்பேக் கொடுக்க மும்பை உருவாக்கியுள்ள – புதிய அணியின் மொத்த வீரர்கள் பட்டியல்

அந்தவகையில் தான் ராபின் உத்தப்பாவின் இடத்திற்கு சரியான மாற்றுவீரராக ரகானேவை தோனி தேர்வு செய்துள்ளார். அதுமட்டும் இன்றி ஏற்கனவே தோனியின் தலைமையிலான புனே அணியில் ரஹானே சிறப்பாக செயல்பட்டார் என்பதனால் இம்முறையும் அவர் அற்புதமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement