ஐபிஎல் 2023 : 6வது கோப்பையுடன் மாஸ் கம்பேக் கொடுக்க மும்பை உருவாக்கியுள்ள – புதிய அணியின் மொத்த வீரர்கள் பட்டியல்

Mumbai Indians MI
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்காக டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்ற 405 கிரிக்கெட் வீரர்களை காலியாக இருந்த 87 இடங்களுக்கு வாங்குவதற்காக களமிறங்கிய 10 அணிகளில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்கும் மும்பை இந்தியன்ஸ் 8 வீரர்களை வாங்கியது. குறிப்பாக 2010 முதல் தன்னுடைய மிகச் சிறந்த செயல்பாடுகளால் 5 கோப்பைகளை வெல்வதில் கருப்பு குதிரையாக செயல்பட்ட கைரன் பொல்லார்ட் இந்த வருடத்துடன் ஓய்வு பெற்றதால் அவருக்கு பதிலான மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மும்பை களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் தற்போதைய தீர்வை மட்டும் பார்க்காமல் வருங்காலத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் பார்த்த அந்த அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 23 வயது இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை 17.50 கோடிகள் என்ற பிரம்மாண்ட தொகைக்கு எதிரணிகளுடன் கடுமையாக போட்டி போட்டு வாங்கியது. சர்வதேச கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும் பொல்லார்ட் போலவே மிரட்டலான ஸ்ட்ரைக் ரைட்டில் ரன்களை குவிக்கும் திறமை பெற்றுள்ள அவர் பந்து வீச்சிலும் அசத்தும் திறமை பெற்றுள்ளார்.

- Advertisement -

சீறிப்பாயுமா மும்பை:
அவருடன் மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்ஷனை வெறும் 1.50 என்ற குறைந்த விலையில் வளைத்துப் போட்ட அந்த அணி நிர்வாகம் சுழல் பந்து வீச்சுத் துறையை பலப்படுத்த அனுபவ வீரர் பியூஸ் சாவ்லாவை 50 லட்சத்துக்கு வாங்கி அசத்தியது. அது போக சாம்ஸ் முலானி போன்ற இளம் வீரர்களை குறைந்த விலைக்கு வாங்கிய அந்த அணி நிர்வாகம் இந்த ஏலத்தில் வாங்கிய புதிய வீரர்களின் பட்டியல் பின்வருமாறு.
கேமரூன் கிரீன் (17.50 கோடி), ஜே ரிச்சர்ட்சன் (1.5 கோடி), பியூஸ் சாவ்லா (50 லட்சம்), டூயன் யான்சென் (20 லட்சம்), விஷ்ணு வினோத் (20 லட்சம்), சம்ஸ் முலானி (20 லட்சம்), நேகல் வதேரா (20 லட்சம்), ராகவ் கோயல் (20 லட்சம்)

இந்த ஏலத்தில் 20.55 கோடிகளுடன் களமிறங்கிய அந்த அணி நிர்வாகம் அவர்களை வாங்குவதற்கு 20.50 கோடிகளை செலவிட்டுள்ளது. அதனால் அந்த அணியிடம் தற்போது 5 லட்சம் மட்டுமே கையிருப்பு உள்ளது. மேலும் ஏலத்தின் முடிவில் அதிகபட்ச இடங்களான 25 இடங்களில் 24 வீரர்களை மும்பை அணி நிர்வாகம் நிரப்பியுள்ளது. அதில் 16 இந்திய வீரர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

- Advertisement -

முன்னதாக இந்த வருடம் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்து வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்தை சந்தித்த மும்பை நிர்வாகம் அந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு டைமல் மில்ஸ், டேனியல் சாம்ஸ் போன்ற சுமாராக செயல்பட்ட வீரர்களை கழற்றி விட்டது. அதே சமயம் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா, இஷான் கிசான், சூரியகுமார் யாதவ், தேவாலட் ப்ரேவிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்க வைத்த அந்த அணிக்கு அடுத்த வருடம் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரும் திரும்புகிறார்.

அதனால் துண்டு ஒரு தடவை தவறியதை போல் இந்த வருடம் சந்தித்த படுதோல்வியிலிருந்து கொதித்தெழுந்து 6வது கோப்பையை வெல்வதற்கு போராட தயாராகியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2023 சீசனில் விளையாடப் போகும் அனைத்து வீரர்களின் பட்டியல் இதோ:

இதையும் படிங்கஐபிஎல் 2023 : ஏலத்தில் அசத்தி 5வது கோப்பையை வெல்ல தயாரான சிஎஸ்கே படை – புதிய அணி வீரர்களின் மொத்த விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ரமந்தீப் சிங், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ட்ரிஸன் ஸ்டப்ஸ், தேவால்ட் ப்ரேவிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திக்கேயா, ஹ்ரித்திக் ஷாக்கீன், ஜேசன் பெஹரண்டாப், ஆகாஷ் மாத்வால், கேமரூன் க்ரீன், ஜே ரிச்சர்ட்சன், பியூஸ் சாவ்லா, டூயன் யான்சென், விஷ்ணு வினோத், சாம்ஸ் முலானி, நேஹல் வாதேரா, ராகவ் கோயல்

Advertisement