வீடியோ : 103மீ மெகா சிக்ஸர், வியந்த டு பிளேஸிஸ் – கையில் தையலுடன் மிரட்டிய நாளில் மீண்டும் ஆர்சிபி’யை காப்பாற்றிய கிங் கோலி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் கனவுடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது. குறிப்பாக தோற்றால் வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலையில் ஹைதராபாத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 65வது லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு தன்னுடைய கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலைமைக்கு போராடி வந்துள்ளது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் ஹென்றிச் க்ளாஸென் சதமடித்து 104 (51) ரன்கள் விளாசிய அதிரடியில் 187 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய பெங்களூருவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே நிதானமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 18 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 172 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர். அதில் விராட் கோலி 12 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 100 (63) ரன்களும் டு பிளேஸிஸ் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 71 (47) ரன்களும் எடுத்து 19.2 ஓவரிலேயே வெற்றி பெறுவதற்கு உதவினர்.

- Advertisement -

அதே நாளில் சதம்:
அப்படி இப்போட்டியில் அட்டகாசமாக பேட்டிங் செய்த விராட் கோலி 9வது ஓவரில் நிதிஷ் ரெட்டி வீசிய முதல் பந்திலேயே அசால்டாக நின்ற இடத்திலேயே சிக்ஸரை பறக்க விட்டு ரசிகர்களை குதூகல படுத்தினார். குறிப்பாக நல்ல டைமிங் மற்றும் பவர் கொடுத்து அடித்ததால் 103 மீட்டர் தொலைவு பறந்து சென்ற அந்த சிக்ஸரை பார்த்து எதிர்புறமிருந்த கேப்டன் டு பிளேஸிஸ் வியக்கும் ரியாக்சனை கொடுத்து பாராட்டினார்.

முன்னதாக 2016 சீசனில் பஞ்சாப்புக்கு எதிரான முக்கிய போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற சூழ்நிலையில் பெங்களூரு களமிறங்கியது. போதாகுறைக்கு மழை பெய்ததால் 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு காயமடைந்த கையில் தையல் போட்டுக்கொண்டு விளையாடிய விராட் கோலி சதமடித்து 113 (50) ரன்கள் விளாசி 211/3 என்ற பெரிய ஸ்கோரை எடுக்க உதவி இறுதியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

மே 18ஆம் தேதியன்று காயத்துடன் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடிய அவர் 2016 சீசனில் பெங்களூரு ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதே போலே நேற்று மே 18ஆம் தேதி பிளே ஆஃப் செல்ல நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற வாழ்வா – சாவா போட்டியில் அதே போலவே அபாரமாக பேட்டிங் செய்த அவர் சதமடித்து பெங்களூருவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்று தன்னை சாம்பியன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

மேலும் 2013 மே 18இல் சென்னைக்கு எதிராக 56 (29) ரன்களும் 2015 மே 18ஆம் தேதி ஹைதராபாத்துக்கு எதிராக 44* (18) ரன்கள் விளாசிய பெங்களூருவின் முக்கிய போட்டிகளில் வெற்றிகளியில் பங்காற்றினார். இதனால் உங்கடையை அதிர்ஷ்டகரமான ஜெர்ஸி நம்பர் 18 என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். முன்னதாக சர்வதேச அளவில் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வரும் அவர் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் கோல்டன் டக் அவுட்டாகி ஏகப்பட்ட விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டார்.

இதையும் படிங்க:IPL 2023 : காயம்ன்னு பொய் சொல்லிட்டு வந்துருக்கலாம், நீங்க எதுக்குமே சரிப்பட மாட்டீங்க – பஞ்சாப் அணியை விளாசிய சேவாக்

இருப்பினும் அதற்காக மனம் தளராமல் போராடிய அவர் 2021 ஆசியக் கோப்பையில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கி கடந்த 8 மாதங்களுக்குள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் 2019இல் கொல்கத்தாவுக்கு எதிராக கடைசியாக சதமடித்திருந்த அவர் தற்போது 4 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரிலும் அந்த மோசமான கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement