வீடியோ : கில்லி விஜய் போல மொத்தமாக மாறிய எலும்பை நொடியில் மாற்றி மீண்டும் பந்து வீசிய வீரர் – காயத்தை வீழ்த்திய மாஸ் தருணம்

Ven Der Merwe
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் டி20 ப்ளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூன் 19ஆம் தேதி செல்ம்ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற 89வது லீக் போட்டியில் எசக்ஃஸ் மற்றும் சோமர்செட் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எசக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடும் முயற்சியுடன் செயல்பட்டு 19.2 ஓவர்களில் 186 ரன்கள் விளாசி ஆல் அவுட்டானது. குறிப்பாக அந்த அணிக்கு பெரோஸ் குஷி 1, லாரன்ஸ் 8, மைக்கேல் பெப்பர் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 15/3 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய பால் வால்டர் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 51 (27) ரன்களும் ராபின் தாஸ் 11 பவுண்டரி 2 சிக்ஸருடன் 72 (39) ரன்களும் எடுத்தனர். சோமர்செட் சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 187 என்ற இலக்கை துரத்திய சோமர்செட் அணிக்கு 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்களின் டாம் பாட்டன் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 (30) ரன்களும் வில் ஸ்மிட் 1 பவுண்டரி 5 சிக்ஸருடன் 36 (16) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

கில்லி விஜய் போல:
அதை வீணடிக்காத வகையில் அடுத்து வந்த டாம் கோலர்-கேட் மோர் 4 சிக்சருடன் 28 (11) ரன்களும் டாம் அபேல் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 40* (26) ரன்களும் சீன் டிக்சன் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 30* (17) ரன்களும் எடுத்தனர். அதனால் 16.3 ஓவரிலேயே 187/3 ரன்கள் எடுத்த சோமர்செட் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்ற நிலையில் எசக்ஸ் சார்பில் அதிகபட்சமாக டேனியல் சாம்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எசக்ஸ் அணிக்கு எதிராக 16வது ஓவரை நெதர்லாந்து வீரர் வேண் டர் மெர்வி வீசினார்.

அதில் 3வது பந்தை எதிர்கொண்ட க்ரிட்ச்லே அதிரடியான வேகத்தில் நேராக அடித்தார். அப்போது தம்மை நோக்கி நேராக வந்த பந்தை தரையோடு தரையாக பிடிக்கும் முயற்சித்த அவர் துரதிஷ்டவசமாக கைகளில் சரியான அடி வாங்கி வலியால் துடித்தார். இருப்பினும் வலியை பொறுத்துக் கொண்டே பந்தை எடுத்த அவர் உடனடியாக அணி மருத்துவரை சோதிக்குமாறு களத்திற்கு அழைத்தார். அதை விட அத்தனை வலிகளையும் பல்லைக் கடித்துக் கொண்டே தாங்கிய அவர் முகத்தில் சிரிப்புடன் மருத்துவரை நோக்கி சென்றது வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

ஏனெனில் பந்து வந்த வேகத்தில் தரையுடன் பிடித்ததால் நலமாக அடி வாங்கிய அவருடைய சுட்டவிரல் எலும்பு முற்றிலுமாக மாறிப் போய் கொஞ்சம் கூட அசைக்க முடியாத அளவுக்கு நகர்ந்து விட்டது. அதனால் இந்த போட்டியில் இருந்து பாதியுடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை மருத்துவர் சோதித்து தேவையான முதலுதவிகளை கொடுத்தார். அப்போது அதை பார்க்காமல் முகத்தை திருப்பி கொண்டு மும்பை போலவே பல்லை கடித்து வலிகளை தாங்கிக் கொண்ட அவருடைய எலும்பை நுணுக்கமாக அசைத்து சரியான இடத்தில் மருத்துவர் மாற்றி வைத்தார்.

அதை உணர்ந்த வேன் டெர் மெர்வி அதே வேகத்துடன் பந்து வீசுவதற்காக மீண்டும் மீண்டும் ஓடியது களத்தில் இருந்த ரசிகர்களை கைத்தட்ட வைத்ததுடன் வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. நல்ல வேளையாக இடது கையில் பந்து வீசும் அவருக்கு அந்த காயம் வலது கையில் ஏற்பட்ட காரணத்தால் லேசான வலியை பொறுத்துக் கொண்டு தொடர்ந்து அந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 36 ரன்களை கொடுத்து ஒரு விக்க டைம் எடுத்து அசத்தினார்.

இதையும் படிங்க:இப்போதைக்கு இந்தியாவை ரீபில்ட் பண்ணி சரியான வழி நடத்த ராகுல் டிராவிட் தான் தகுதியானவர் – தெ.ஆ ஜாம்பவான் மெகா ஆதரவு

மொத்தத்தில் பிரபல தமிழ் கில்லி திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் தன்னுடைய எலும்புகளை மாற்றி அமைத்து வெல்வது போல இந்த தருணம் அமைந்தது என்றே சொல்லலாம். ஆனால் போலியான அந்த காட்சியை விட உண்மையாக வலியை பொறுத்துக் கொண்டு காயத்தை வீழ்த்தி மாஸ் காட்டிய மெர்வி தான் இப்போட்டியில் உண்மையான ஹீரோ என்றால் மிகையாகாது.

Advertisement