சந்திராயன் 3 வெற்றியால் துள்ளி குதித்த தோனியின் மகள் – ரசிகர்களாக மாறி கொண்டாடிய இந்திய வீரர்கள்

Chandrayan Team india
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 2023 உலகக் கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்க வேண்டும் என்பதற்காக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக கம்பேக் கொடுத்தது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அவரது தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா இத்தொடரின் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் 2வது போட்டியிலும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

குறிப்பாக முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா ஆட்டநாயகன் விருது வென்று மிகச்சிறந்த கம்பேக் கொடுத்த நிலையில் 2வது போட்டியில் இளம் வீரர் ரிங்கு சிங் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருது வென்றது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதி டப்லின் நகரில் நடைபெற்றது.

- Advertisement -

கொண்டாடிய இந்தியா:
இருப்பினும் இந்திய நேரப்படி மாலை 7 மணி முதலே டப்லின் நகரில் வெளுத்து வாங்கிய மழை 2 மணி நேரங்களுக்கு மேலாக கொட்டி தீர்த்தது. ஆனால் அதற்குள் நிர்ணயிக்கப்பட்ட நேரமும் முடிவுக்கு வந்ததால் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்ததை தொடர்ந்து 2 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து கோப்பையை முத்தமிட்டு தங்களை நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்தது.

முன்னதாக இந்த போட்டி துவங்குவதற்கு முன்பாக மாலை 6 மணியளவில் நிலவிற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை களமிறக்கும் முக்கியமான நிகழ்வு நடைபெற்றது. இந்த உலகில் இதுவரை யாருமே பார்க்காத நிலவின் தென் துருவ பகுதியில் சோதனைகளை செய்வதற்காக அனுப்பப்பட்ட அந்த விண்கலத்திற்கு போட்டியாக ரஷ்யா தங்களுடைய விண்கலத்தை அனுப்பியது. ஆனால் அது கடைசி நேரத்தில் தோல்வியில் முடிந்ததால் இந்தியா அனுப்பிய விண்கலம் வெற்றி காணுமா என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த நாடுகளுக்கு மத்தியில் அதிகரித்தது.

- Advertisement -

அந்த நிலைமையில் ஜூலை 14ஆம் தேதி அனுப்பப்பட்டு 41 நாட்கள் பயணித்த சந்திரன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் மெல்ல மெல்ல எந்த பிரச்சனையுமின்றி சமூகமாக களமிறங்கி சரித்திரம் படைத்தது. அப்போது இஸ்ரோவில் இருந்த விஞ்ஞானிகள் அதை ஆரவாரம் செய்து கொண்டாடிய நிலையில் பிரதமர் மோடியும் இந்திய மூவர்ண கொடியை அசைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பாராட்டு தெரிவித்தார்.

ஏனெனில் இதன் வாயிலாக உலகிலேயே அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளை காட்டிலும் நிலவின் தென் துருவப் பகுதியில் காலடி பதித்த முதல் நாடு என்ற சரித்திரத்தை இந்தியா படைத்துள்ளது. அந்தளவுக்கு இந்தியர்களை பெருமையடைய வைத்த அந்த தருணத்தை இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக பும்ரா தலைமையிலான இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கைதட்டிக் கொண்டே ஆர்வத்துடன் பார்த்தனர். அப்போது வெற்றிகரமாக விக்ரம் லண்டன் களமிறங்கிய தருணத்தில் சிவம் துபே போன்ற வீரர்கள் ரசிகர்களைப் போல மாறி வெறித்தனமாக கூச்சலிட்டு இந்தியாவின் மகத்தான வெற்றியை கொண்டாடினார்கள்.

அதே போல முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி அந்த தருணத்தை தம்முடைய வீட்டில் தொலைக்காட்சியின் வாயிலாக பார்த்தார். அப்போது அவருடைய மகள் ஜீவா துள்ளி குதித்து சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களும் பொதுமக்களும் சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement