கிங் கோலியின் மேஜிக், அசத்தியமான வெற்றியை குழந்தையை போல் கொண்டாடிய 3 நட்சத்திர இந்திய ஜாம்பவான் வீரர்கள்

Irfan Pathan SUnil Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற 16வது லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பரிசளித்த வரலாற்று தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்துள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/8 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 52* (51) ரன்களும் இப்திகார் அகமது 51 (34) ரன்களும் குவித்தனர்.

அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல், கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 31/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கினாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 40 (37) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் விராட் கோலி நங்கூரமாக நின்று 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினாலும் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அவுட்டாகி மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

கொண்டாடிய கவாஸ்கர்:
ஆனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது முகமத் நவாஸ் வீசிய ஒய்ட் வலையில் தினேஷ் கார்த்திக் போலவே சிக்காமல் அறிவுப்பூர்வமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் வீசப்பட்ட பந்தில் ஃபீல்டர்கள் உள்ளே இருந்தும் லாவகமாக தூக்கி அடித்து இந்தியாவை 20 ஓவர்களில் 160/4 ரன்கள் எடுக்க வைத்து திரில் வெற்றி பெற வைத்தார். இந்த போட்டிக்காக கடந்த ஒரு வருடமாக எதிர்பார்ப்பு நிலவியதால் போட்டி நடைபெற்ற மெல்போர்ன் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

குறிப்பாக விராட் கோலியின் மேஜிக் பேட்டிங்கால் கையை விட்டு நழுவிய வெற்றி மீண்டும் கிடைத்த போது மைதானத்தில் கூடியிருந்த அத்தனை ரசிகர்களும் “சக்தே இந்தியா” பாடலை ஒன்று சேர்ந்து பாடியது அனைவருக்கும் புல்லரிப்பை ஏற்படுத்தியது. அப்போது அதே போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் போட்டி முடியும் தருவாயில் வர்ணனையாளர்கள் அறையை விட்டு வெளியே வந்து பவுண்டரி எல்லையின் அருகில் நின்று வெற்றிக்காக காத்திருந்தார்.

- Advertisement -

இறுதியில் அஷ்வின் வெற்றி பெற வைத்த போது மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்த அவர் 73 வயதானவர் என்பதை மறந்து 5 வயது குழந்தையைப் போல துள்ளிக்குதித்து கொண்டாடினார். அவருடைய அருகே இருந்த முன்னாள் தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஆகியோரும் வெற்றியை துள்ளிக் குதித்துக் கொண்டாடி ஒருவருக்கு ஒருவர் கையால் மோதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரபல கிரிக்கெட் தொகுப்பாளர் ஜட்டின் சப்ரு வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்படி ஒரு ஜாம்பானை ரசிகனாக மாற்றி துள்ளி குதிக்க வைத்த விராட் கோலி தன்னுடைய வாழ்நாளில் டி20 கிரிக்கெட்டில் விளையாடிய இன்னிங்ஸ்களில் இது தான் சிறந்தது என்று போட்டி முடிந்ததும் உணர்ச்சி பொங்க பேசினார். அதற்கு முன்பாக மேலும் போட்டி முடிந்த பின் தனி ஒருவனாக வெற்றி பெற்று கொடுத்த விராட் கோலியை ரோகித் சர்மா மைதானத்திற்குள் நுழைந்த தோளில் தூக்கி ஒரு ரவுண்டு வந்து சுற்றி கொண்டாடியதும் இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அவரது ஆட்டத்துக்கு ஆட்டநாயகன் விருது சமர்பிக்கப்பட்டதால் உலகக் கோப்பை வரலாற்றிலும் டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற 2 உலக சாதனைகளையும் அவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement