வீடியோ : அவுட் கேட்கும் வரை கொடுக்க மாட்டேன், சோம்பேறித்தனமாக அடம் பிடித்த அம்பயர் – சிரித்த வர்ணனையாளர்கள்

Steve Smith Umpire Jose Buttler
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தொடர்ந்து அங்கேயே இருந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆனால் உலக கோப்பையை வென்ற சோம்பலை போல் சுமாராக செயல்பட்டு முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஏற்கனவே தொடரை இழந்த இங்கிலாந்து நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற 3வது போட்டியில் 221 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அதிரடியாக செயல்பட்டு 355/5 ரன்கள் குவித்து மிரட்டியது.

அதிகபட்சமாக 269 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் சதமடித்து 106 (102) ரன்களும் டிராவிஸ் ஹெட் சதமடித்து 152 (130) ரன்களும் விளாசினர். இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஓலி ஸ்டோன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 356 ரன்களை துரத்திய இங்கிலாந்து ஆரம்ப முதலே ஆஸ்திரேலியாவின் அதிரடியான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 31.4 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சரித்திரத்தை படைத்த ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் சந்தித்த தோல்விக்கும் தக்க பதிலடி கொடுத்தது.

- Advertisement -

அம்பயரின் அடம்:
முன்னதாக இப்போட்டியில் டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் ஆகியோரது அதிரடிக்கு பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்தின் ஓலி ஸ்டோன் வீசிய 46வது ஓவரின் 3வது பந்தை வித்தியாசமான ஸ்கூப் ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை தவற விட்ட அவர் எட்ஜ் கொடுத்ததால் பந்து நேராக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரின் கைகளில் தஞ்சமடைந்தது. அப்போது உறுதியாக அவுட் தான் என்று உணர்ந்த ஜோஸ் பட்லர் ஏற்கனவே டேவிட் வார்னர் – டிராவிஸ் ஆகியோர் அடித்த அடியில் இருந்த விரத்தியால் சத்தமாக அப்பீல் செய்யாமல் கையை மட்டும் உயர்த்தினார்.

மறுபுறம் எட்ஜ் கொடுக்காதது போலவே இருந்த ஸ்டீவ் ஸ்மித் நடுவர் அவுட் கொடுக்காததால் தொடர்ந்து களத்திலேயே இருந்தார். அதனால் ஆச்சர்யமடைந்த ஜோஸ் பட்லர் நடுவர் அவுட் கொடுக்காத காரணத்தால் நேரடியாக டிஆர்எஸ் ரிவ்யூ எடுக்க சிக்னல் கொடுத்தார். அப்போது தான் கதை டிவிஸ்ட் நிகழ்தது. அதாவது “அது எனக்கு அவுட் என்று தெரியும் ஆனால் நீங்கள் கேட்காததால் நான் கொடுக்கவில்லை” என்ற வகையில் டிஆர்எஸ் சிக்னல் கொடுத்த ஜோஸ் பட்லருக்கு அம்பயர் பதில் சிக்னல் கொடுத்தார். அதனால் டிஆர்எஸ் கேட்பதை கை விட்ட ஜோஸ் பட்லர் வழக்கமான “ஹவுசாட்” என்று சத்தமாக அப்பீல் செய்தார்.

- Advertisement -

அதன் பின்பே நீதியின் தராசு போல செயல்பட்ட அம்பயர் ஸ்டீவ் ஸ்மித்திடம் நீங்கள் அவுட் தான் என்று 2 முறை கையை உயர்த்தி அவுட் என அறிவித்தார். அதனால் ஸ்டீவ் ஸ்மித் பெவிலியன் திரும்பினார். பொதுவாக பேட்ஸ்மேன் அவுட் என்று உறுதியாக தெரிந்தால் நடுவர் கையை உயர்த்தி அவுட் கொடுக்க வேண்டியது விதிமுறையாகும். மேலும் பவுலர் கேட்டால் தான் அவுட் கொடுக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது.

இருப்பினும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இது போன்ற 99% சமயங்களில் பவுலர் அவுட் கேட்ட பின்னரே நடுவர்கள் அவுட் கொடுப்பார்கள். அந்த வகையில் அவுட் என்றாலும் நீங்கள் கேட்டால் தான் நான் அவுட் கொடுப்பேன் என்ற வகையில் நடுவர் பால் வில்சன் அடம் பிடித்து அவுட் கொடுத்தது ரசிகர்களை கலகலக்க வைத்தது. குறிப்பாக இப்போட்டியில் வர்ணையாளராக செயல்பட்ட முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் நடுவரின் இந்த செயலை பார்த்து தொலைக்காட்சி நேரலை வர்ணனையில் வாய்விட்டு சிரித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement