கடைசி 2 ஓவர்.. W,W, W, W… W, W.. தெறிக்கவிட்ட பவுலர்.. டை ஆன மேட்ச்… சூப்பர் ஓவரில் சுவாரசியம்.. இந்திய கேப்டன்கள் சோகம்

- Advertisement -

அமெரிக்காவில் ஓய்வு பெற்ற முன்னாள் ஜாம்பவான் நட்சத்திர வீரர்கள் விளையாடி வந்த யூஎஸ் மாஸ்டர்ஸ் டி10 கிரிக்கெட் தொடர் கடந்த 10 வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தது. 10 ஓவர்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடரில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா ஆகியோர் தலைமை தாங்கிய அணிகள் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சுமாராக செயல்பட்டு பாதியிலேயே வெளியேறின. மறுபுறம் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றை கடந்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா-உல்-ஹக் தலைமை தாங்கிய நியூயார்க் வாரியர்ஸ் மற்றும் பென் டங்க் தலைமை தாங்கிய டெக்சாஸ் சார்ஜர் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

அதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி ஆகஸ்ட் 27ஆம் தேதி லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூயார்க் 10 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 92/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜொனதன் கார்ட்டர் 39* (17) ரன்களும் திலகரத்னே தில்சன் 18 (12) ரன்களும் எடுக்க டெக்சா சார்பில் அதிகபட்சமாக ஈசான் அடில் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

த்ரில்லர் ஃபைனல்:
அதை தொடர்ந்து 93 ரன்களை துரத்திய டெக்சாஸ் அணிக்கு நட்சத்திர வீரர் முகமது ஹபீஸ் 46 (17) ரன்களும் கேப்டன் பென் டங்க் 20 (12) ரன்களும் எடுத்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். அதனால் வெற்றியை நெருங்கினாலும் 9வது ஓவரில் தரங்கா 1, முஸ்டர்ட் 0, பெரேரா 4, ப்ரூம் 0 என 4 விக்கெட்களை சாய்த்து சோஹைல் கான் போட்டியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். அந்த நிலையில் ஷாஹித் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் 4 பந்துகளில் சோகைல் தான்வீர் 8 ரன்களை எடுத்தார்.

அதனால் அந்த அணி எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடைசி 2 பந்துகளில் மாயாஜாலம் நிகழ்த்திய அப்ரிடி சோஹைல் டன்வீரை 8 ரன்களில் அவுட்டாக்கி அடுத்து வந்த பிடல் எட்வர்ட்ஸை டக் அவுட்டாக்கினார். அதன் காரணமாக போட்டி சமனில் முடிந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வீசப்பட்ட சூப்பர் ஓவரில் சோஹைல் கான் எதிராக பேட்டிங் செய்த டெக்ஸாஸ் அணிக்கு பென் டங்க் 6 (2) ரன்களும் முக்தார் 8* (2) ரன்களும் எடுத்ததால் 15/1 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதையும் படிங்க:உண்மையிலேயே அந்த கொடுமையை என்னால தாங்க முடியல. அதான் ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டேன் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

அதை தொடர்ந்து சோஹைல் தன்வீர் வீசிய சூப்பர் ஓவரில் ஷாஹித் அப்ரிடி கடுமையாக போராடியும் 2* (3) ரன்களும் ஜொனாதன் கார்ட்டர் 11* (3) ரன்களும் எடுத்தனர். அதன் காரணமாக சூப்பர் ஓவரின் 13/0 ரன்கள் மட்டுமே எடுத்த நியூயார்க் அணியை வீழ்த்திய டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசி முக்கிய பங்காற்றிய சோஹைல் கான் ஆட்டநாயகன் விருதையும் தொடர் முழுவதும் அசத்திய முகமது ஹபீஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement