வீடியோ : மேஜிக் சிக்ஸர்களால் மும்பையை பொளந்த சுப்மன் கில் – வாய் மீது கைவைத்து பாராட்டிய ரோஹித் சர்மா

- Advertisement -

உச்ச கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் செய்து கொண்டது. குறிப்பாக குவாலிஃபயர் 1 போட்டியில் சென்னையிடம் தோல்வியை சந்தித்த குஜராத் எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பையை ஃபைனலுக்கு செல்லும் 2வது வாய்ப்பாக எதிர்கொண்டது. மழையால் அரை மணி நேரம் தாமதமாக துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்திய சுப்மன் கில் விரைவாக ரன்களை சேர்த்தார்.

இருப்பினும் மறுபுறம் பெயருக்காக 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட ரித்திமான் சகா 3 பவுண்டரியுடன் 18 (16) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கைகோர்த்த கில் தொடர்ந்து மும்பை பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு முதல் ஆளாக அரை சதமடித்து வலுவான அடித்தளத்தை அமைத்தார். குறிப்பாக சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்த சதங்களை அடித்து சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த சீசனிலும் ஏற்கனவே அடுத்தடுத்த சதங்களை அடித்துள்ளார்.

- Advertisement -

மிரட்டிய கில்:
அந்த வகையில் இந்த போட்டியில் உச்சகட்ட ஃபார்மைத் தொட்டு மும்பை பவுலர்களை எப்படி போட்டாலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் வெளுத்து வாங்கிய அவர் சதத்தை நெருங்கினார். குறிப்பாக ஆகாஷ் மாத்வால் வீசிய 12வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு ரவி சாஸ்திரி, இயன் பிசப் போன்ற வர்ணனையாளர்களை ஆச்சரியப்படுத்திய அவர் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். மறுபுறம் சாய் சுதர்சன் தொடர்ந்து மெதுவாக பேட்டிங் செய்து கம்பெனி கொடுத்த நிலையில் எதிர்ப்புறம் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த ஆகாஷ் மாத்வால் உள்ளிட்ட அனைத்து மும்பை பவுலர்களுக்கும் கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய அவர் வெறும் 49 பந்துகளில் இந்த சீசனில் 3வது சதமடித்தார்.

அதே வேகத்தில் தொடர்ந்து மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் 2வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 7 பவுண்டரி 10 சிக்ஸருடன் 129 (60) ரன்கள் விளாசி ஒரு வழியாக கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். குறிப்பாக கேமரூன் கிரீன் வீசிய 15வது ஓவரின் 5வது பந்தில் இறங்கியவரே நடந்து சென்ற அவர் ஹூக் ஷாட் வாயிலாக 81 மீட்டர் சிக்ஸரை அடித்ததை பார்த்து எதிரணியின் கேப்டனான ரோகித் சர்மாவே வாய் மீது கை வைத்து வியந்து போனார். மேலும் தங்களது அணியை பந்தாடிய அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வதால் சதமடித்த போது ரோகித் சர்மா கை கொடுத்து சிரித்த முகத்துடன் பாராட்டவும் செய்தார்.

- Advertisement -

அப்படி ரசிகர்களை மகிழ்வித்து அனைவரது பாராட்டு மழையில் நனைந்து சென்ற அவருக்குப் பின் மறுபுறம் மெதுவாக விளையாடிய சாய் சுதர்சன் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (31) ரன்கள் எடுத்து அணி நலனுக்காக கடைசி ஓவரில் ரிட்டயர்ட் அவுட்டாகி சென்றார். இறுதியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 2 பவுண்டரி 2 சிக்சருடன் 28* (13) ரன்களும் ரசித் கான் 5* (2) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 233/3 ரன்கள் எடுத்து மிரட்டியது. சொல்லப்போனால் வரலாற்றில் பிளே ஆப் சுற்றில் எந்த அணியும் 200 இலக்கை வெற்றிகரமாக துரத்தியது கிடையாது.

இதையும் படிங்க:வீடியோ : மேஜிக் சிக்ஸர்களால் மும்பையை பொளந்த சுப்மன் கில் – வாய் மீது கைவைத்து பாராட்டிய ரோஹித் சர்மா

அந்தளவுக்கு சுப்மன் கில் அதிரடியால் மிகப்பெரிய ஸ்கோர் குவித்த குஜராத் கிட்டத்தட்ட இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்தது என்று சொல்லலாம். இருப்பினும் சூரியகுமார் யாதவ் போன்ற கடப்பாரை பேட்ஸ்மேன்களை கொண்ட மும்பை அதையும் துரத்தி வெற்றி காண்பதற்கு போராடி வருகிறது.

Advertisement