வீடியோ : இதுக்கு முடிவே இல்லையா? அம்பயரை களத்திற்குள் சென்று மிரட்டிய சாகிப் அல் ஹசன் – தடை கோரும் ரசிகர்கள்

Shakib Al Hasan Fight Umpire
- Advertisement -

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்கத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் எனப்படும் பிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதனுடைய 2023 சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 10ஆம் தேதியன்று நடைபெற்ற 7வது லீக் போட்டியில் ராங்க்பூர் ரைடர்ஸ் மற்றும் பரிஷால் அணிகள் மோதின. மிர்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராங்க்பூர் அணி 20 ஓவரில் 158/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோனி தாலுக்தார் 40 (28) ரன்களும் சோயப் மாலிக் 54* (36) ரன்களும் எடுத்தனர். அதை துரத்திய பரிஷால் அணி 19.2 ஓவரிலேயே 6 விக்கெட் இழந்து வெற்றி பெற்றது.

அந்த அணிக்கு இப்ராஹிம் ஜாட்ரான் 52 (41), மெஹதி ஹாசன் 43 (29) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் 159 ரன்களைத் துரத்துவதற்காக பரிஷால் அணியின் தொடக்க வீரர்கள் களத்திற்கு சென்றார்கள். அப்போது அந்த அணியின் தொடக்க வீரன் சதுரங்கா டீ சில்வா முதல் பந்தை எதிர்கொள்ள தயாரான போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனமுல் ஹைக் முதல் பந்தை எதிர்கொள்ளுமாறு பவுண்டரி எல்லையில் இருந்து அதே அணியைச் சேர்ந்த வங்கதேசத்தின் நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் சைகை கொடுத்தார்.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
அதை ஏற்று ஆனமுல் ஹைக் முதல் பந்தை எதிர்கொள்ள செல்வதை கவனித்த அம்பையர் “இதெல்லாம் ஆரம்பத்திலேயே முடிவு செய்த விடக்கூடாதா கடைசி நேரத்தில் ஏன் மாற்றம்” என்ற அபிப்பிராயத்துடன் முதல் பந்தை எதிர்கொள்ள விடாமல் தடுத்தார். அப்போது பவுண்டரி எல்லை அருகே இருந்து மீண்டும் மீண்டும் சாகிப் அல் ஹசன் தனது கட்டளைப்படி நடக்குமாறு தனது அணி வீரர்களுக்கு சைகை கொடுத்தாலும் நடுவர் தடுத்துக் கொண்டே இருந்தார். அதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான சாகிப் அல் ஹசன் நேரடியாக களத்திற்குள் சென்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு முதல் நடுவர் சளைக்காமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மற்றொரு நடுவருக்கு அருகே சென்ற சாகிப் அல் ஹசன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில் போட்டியை எங்களுக்கு நடத்த தெரியும் நீங்கள் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் நடுவர்கள் சொன்னதால் அங்கிருந்து சாகிப் அல் ஹசன் கிளம்பியதும் போட்டி முழுமையாக நடைபெற்றது. ஆனால் நடுவர்களுடன் இப்படி நேரடியாக களத்திற்குள் சென்று காரசாரமாக வாக்குவாதம் நடத்தும் அளவுக்கு அத்துமீறி நடந்து கொண்ட சாகிப் அல் ஹசனை உங்களது மனதில் என்ன ஹீரோ என்று நினைப்பா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் இதே தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஒய்ட் வழங்காமல் ஒன் பவுன்ஸ் வழங்கியதால் மிகவும் ஆத்திரமடைந்து கத்திய சாகிப் அல் ஹசன் பக்கவாட்டில் இருந்த நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் சர்வதேச அரங்கில் வங்கதேசத்தின் அடையாளமாக ஜாம்பவானாக கருதப்படும் நீங்கள் இப்படி அடிக்கடி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டலாக செயல்படுவது எந்த வகையிலும் இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்காது என்று வர்ணனையாளர்களே கடுமையாக விமர்சித்தனர்.

அத்துடன் அவரது இந்த செயலை கண்டிக்கும் வகையில் பிபிஎல் நிர்வாகம் சார்பில் அப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 15% அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனாலும் திருந்தாமல் அடுத்த போட்டியிலேயே நடுவரிடம் வாக்குவாதம் செய்த அவருக்கு இது போன்ற அபராதங்கள் வேலையாகாது தடை செய்தால் மட்டுமே அடங்குவார் என்று ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்கIND vs SL : 2வது ஒன்டே நடைபெறும் ஈடன் கார்ட்னஸ் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

ஏனெனில் கடந்த வருடம் நடைபெற்ற டிபிஎல் தொடரில் இதே போன்ற தருணத்தில் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக அம்பயரிடம் அடிக்காத குறையாக கோபத்தை வெளிப்படுத்திய அவர் ஸ்டம்ப்புகளை எட்டி உதைத்து பிடுங்கி எறிந்தது உலக அளவில் விமர்சனங்களை எழுப்பியது. எனவே சீனியர் வீரராக நன்னடத்தை கடைபிடிக்காமல் தொடர்ந்து அத்துமீறும் இவரை தடை செய்யுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Advertisement