- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வீடியோ: கழற்றி விட்டாலும் மழைக்கு மத்தியில் சஞ்சு சாம்சன் செய்த மனம் உருகும் செயல் – இந்திய அணி நிர்வாகத்தை விளாசும் ரசிகர்கள்

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு மத்தியில் அசத்தலாக செயல்பட்டு 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இளம் இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற இந்தியா கோப்பையை வெல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த நிலையில் நவம்பர் 27ஆம் தேதியன்று ஹமில்டன் நகரில் இருக்கும் செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது ஒருநாள் போட்டியில் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. குறிப்பாக முதல் போட்டியில் 50 ஓவர் ஓவர்களை வீசுவதற்கு 5 பவுலர்கள் மட்டுமே பயன்படுத்தியது தோல்விக்கு காரணமாக அமைந்த நிலையில் அதை தவிர்ப்பதற்காக இப்போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதில் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். மேலும் சுமாராக செயல்பட்ட சர்தூள் தாகூருக்கு பதில் தீபக் சஹர் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

பரிதாப சஞ்சு:
ஆனால் 6வது பந்துவீச்சாளர் வேண்டும் என்பதற்காக சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் சாம்சன் எதற்காக நீக்கப்பட்டார் அவர் என்ன பாவம் செய்தார் என்று ரசிகர்கள் வேதனையை தெரிவிக்கிறார்கள். ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய அவரை 2021 வரை குப்பையாக அவ்வப்போது பயன்படுத்துவதும் தூக்கி எறிவதுமாக பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு இருந்தது. இருப்பினும் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடரில் கடினமாக உழைத்து இந்த வருடம் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்ற அவர் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

ஆனாலும் டி20 உலக கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் பிடிக்காத அவர் இந்த சுற்றுப்பயணத்தில் நடந்த டி20 தொடரிலும் விளையாடும் வாய்ப்பு பெறவில்லை. அந்த நிலையில் துவங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பண்ட், சூரியகுமார் என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 160/4 என தடுமாறிய இந்தியாவை ஸ்ரேயாஸ் ஐயருடன் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த காப்பாற்றிய சஞ்சு சாம்சன் 36 ரன்கள் எடுத்து 306 ரன்கள் குவிக்க உதவினார்.

- Advertisement -

அந்த நிலையில் இப்போட்டியில் 6வது பந்து வீச்சாளர் வேண்டுமென்றால் அறிமுகமானது முதல் இப்போது வரை வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சொதப்பினாலும் தொடர்ந்து ராஜா வீட்டுப் பிள்ளையை போல் வாய்ப்புகள் பெற்று வரும் ரிஷப் பண்ட்டை நீக்கி விட்டு தீபக் ஹூடாவை கொண்டு வந்திருக்கலாமே என்று ரசிகர்கள் நியாயமான கேள்வி எழுப்புகிறார்கள். அதனால் மீண்டும் அவருக்கு அநீதி நடந்த நிலையில் துவங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 ஓவர்கள் விளையாடியதும் மழை வந்ததால் 29 ஓவராக போட்டி குறைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் கேப்டன் தவான் 3 (10) ரன்களில் நடையை கட்டிய நிலையில் சுப்மன் கில் 45* (42) ரன்களும் சூரியகுமார் யாதவ் 34* (25) ரன்களும் எடுத்ததால் 12.5 ஓவரில் 89/1 ரன்களை இந்தியா எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மீண்டும் மழை வந்து தடுத்தது. அப்போது தார்ப்பாயை எடுத்துக்கொண்டு வேகவேகமாக ஓடிவந்த மைதான பராமரிப்பாளர்களுக்கு உதவிய சஞ்சு சாம்சன் பிட்ச்சை வேகமாக மூடுவதற்கு கை கொடுத்தார்.

அதை பார்க்கும் ரசிகர்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அன்றும் இன்றும் இந்திய அணி நிர்வாகம் மீது குறை சொல்லாமல் இப்படி நல்ல மனதுடன் கூல்ட்ரிங்க்ஸ் தூக்குவது, மைதான பராமரிப்பாளர்களுக்கு உதவி செய்வது போன்ற வேலைகளை செய்து வரும் நீங்கள் இதை விட நல்ல நிலைமையில் இருக்க தகுதியானவர்கள் என்று அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அத்துடன் எத்தனை காலம் தான் இந்த அநீதி நடைபெறும் என்று பார்க்கத்தானே போகிறோம் என பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -
Published by