வீடியோ : அதிர்ஷ்டம் இல்லையோ – புள்ளிப் பட்டியலில் சென்னைக்கு டாப் 2 இடத்தை மறுத்த வித்யாசமான ரன் அவுட்

Devon Conwar Run Out
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற 29வது லீக் போட்டியில் தங்களுடைய சொந்த ஊரான சேப்பாக்கத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் 4வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் சென்னையின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி 20 ஓவர்களில் 134/7 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 (26) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 135 ரன்களை துரத்திய சென்னைக்கு 87 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ருதுராஜ் கைக்வாட் 35 (30) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ரகானே 9, ராயுடு 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே அரை சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 77* (57) ரன்கள் குவித்து 18.4 ஓவரிலேயே சென்னையை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

நழுவிய டாப் 2:
முன்னாதாக இந்த போட்டியில் ஹைதராபாத்தை வெறும் 134 ரன்களுக்கு கட்டுப்படுத்திய சென்னை அந்த இலக்கை குறைந்த ஓவர்களிலேயே வென்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றது. ஏனெனில் தலா 6 புள்ளிகளை கொண்டிருந்த பெங்களூரு, மும்பை, பஞ்சாப் ஆகிய அணிகளை காட்டிலும் சென்னையின் ரன் ரேட் கூடுதலாகவே இருந்தது. அந்த நிலைமையில் 135 ரன்களை நங்கூரமாக துரத்திய ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஜோடி 11வது ஓவர் வரை விக்கெட்டை விடாமல் 87 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தது.

இருப்பினும் உம்ரான் மாலிக் வீசிய அந்த 11வது ஓவரின் கடைசி பந்தில் டேவோன் கான்வே நேராக பவுண்டரி அடித்தார். ஸ்டம்புக்கு நேராக வந்த அந்த பந்தை தடுக்க முயற்சித்த உம்ரான் மாலிக் கைகளில் உரசிய பந்து நேராக சென்று ஸ்டம்பில் அடித்தது. மறுபுறம் அந்த சமயத்தில் ரன்கள் எடுப்பதற்காக ருதுராஜ் கைக்வாட் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்திருந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் உள்ளே செல்வதற்குள் பந்து ஸ்டம்பில் அடித்து விட்டது.

- Advertisement -

அதனால் எதிர்பாராத வகையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி சென்ற அவருக்குப் பின் மிடில் ஓவர்களில் வந்த ரகானே மற்றும் ராயுடு ஆகியோர் மயங் மார்கண்டே வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட்டமிழந்து சென்றனர். அதனால் 19வது ஓவர் வரை சென்று அந்த போட்டியை ஒரு வழியாக மொய்ன் அலி பவுண்டரி அடித்து முடித்து வைத்தார். இருப்பினும் நல்ல தொடக்கத்தை பெற்ற சென்னை துரதிஷ்டவசமாக ருதுராஜ் அப்படி ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் நிச்சயமாக இன்னும் 2 – 3 ஓவர்களுக்கு முன்பாகவே போட்டியை முடித்திருக்கும்.

ஏனெனில் அவர் அவுட்டான அழுத்தத்தில் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சற்று நிதானத்தை வெளிப்படுத்தி அவுட்டானதால் இலக்கை எட்டிப் பிடிக்க எக்ஸ்ட்ரா 2 ஓவர்கள் தேவைப்பட்டது. ஒருவேளை 19வது ஓவருக்கு பதிலாக 16வது ஓவரில் முடிஞ்சிருந்தால் +0.355 என்ற தற்போதைய ரன் ரேட்டுக்கு பதிலாக இன்னும் கூடுதலான ரன் ரேட்டை பெற்று குறைந்தபட்சம் அதே 8 புள்ளிகளுடன் இருக்கும் இருக்கும் லக்னோவை (+0.709) முந்தி சென்னை 2வது இடத்தைப் பிடித்திருக்கும் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:CSK vs SRH : ஜெயிக்குறமோ தோக்குறமோ அதெல்லாம் மேட்டர் இல்ல. ஆனா சென்னை ரசிகர்கள் வேறமாதிரி – ஜடேஜா பூரிப்பு

இருப்பினும் அந்த எதிர்பாராத ரன் அவுட் சென்னை ஆரம்பத்திலேயே டாப் 2 இடத்தை பிடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்தது. இந்த தொடரில் 10 அணிகள் விளையாடுவதால் முன்பை விட இரு மடங்கு போட்டி நிலவுகிறது. சொல்லப்போனால் தற்போதைய சூழ்நிலையிலேயே 4, 5, 6, 7 ஆகிய 4 இடங்களில் உள்ள குஜராத், பெங்களூரு, மும்பை, பஞ்சாப் ஆகிய அணிகள் சமமாக தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தும் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எனவே லீக் சுற்றும் முடியும் போது இந்த ரன் ரேட் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே கூடுதலாக இருப்பது மிகவும் அவசியமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement