வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிகா நகரில் துவங்குகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு தயாராகியுள்ளனர். முன்னதாக வெற்றிகரமாக செயல்பட்ட விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற காரணத்தால் புதிய முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா இருதரப்பு தொடர்களில் அசத்திய போதிலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பைகளில் இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை.
அதை விட காயம் மற்றும் பணிச்சுமையால் அடிக்கடி ஓய்வு பெறுவதை வழக்கமாக வைத்திருந்த அவரால் கடந்த வருடம் வரலாற்றிலேயே உச்சகட்டமாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவிற்கு ஏற்பட்டதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதன் காரணத்தாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த வருடம் ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியிலும் டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் விலகிய அவர் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தினார்.
ரோஹித்தின் கிண்டல்:
அதில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் சரியாக பயன்படுத்தாமல் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடதுகை வீரர்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்த அவர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் பேட்டிங்கிலும் சொதப்பியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அப்படி கடந்த சில வருடங்களாகவே சுமாரான ஃபிட்னஸ் கடைபிடித்து பேட்டிங்கிலும் சொதப்பும் அவருக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக காணப்படுகிறது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்காக டாமினிக்கா நகரில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த ரகானேவிடம் கம்பேக் கொடுத்ததைப் பற்றி பிசிசிஐ பேட்டி எடுத்தது. குறிப்பாக 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்டதால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் மனம் தளராமல் ரஞ்சிக்கோப்பையில் இரட்டை சதமடித்து ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அபாரமாக செயல்பட்டு 35 வயதில் கம்பேக் கொடுத்து ஃபைனலில் 89 ரன்கள் விளாசி குறைந்தபட்சம் இந்தியாவின் அவமான இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க உதவினார்.
அதனால் 35 வயதில் கம்பேக் கொடுத்தது பற்றி கேள்வி கேட்ட போது “இந்த வயதில் என்று ஏன் குறைவாக பார்க்கிறீர்கள்? அதாவது தற்போது நான் மிகவும் இளமையாகவும் ஃபிட்டாகவும் இருக்கிறேன்” என்று தன்னுடைய தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் ரஹானே சிறப்பாக பதிலளித்தார். ஆனால் அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா “இளமையாக இருக்கிறேன்” என்று ரகானே சொன்ன போது சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்தார்.
அதை பார்த்து கடுப்பான ரகானே போலவே கோபமடையும் ரசிகர்கள் கேப்டனுக்கு எடுத்துக்காட்டாக முழுமையாக ஃபிட்னஸ் கடைபிடிக்குமாறு கபில் தேவ் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டும் இப்போதும் சுமாராகவே செயல்பட்டு வரும் நீங்கள் அவரை பார்த்து சிரிக்கலாமா? என்று ரோகித் சர்மா மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து ரோகித் சர்மா எந்த வகையான வேலை கொடுத்தாலும் அதை துணை கேப்டனாக செய்து முடிக்க தயாராக இருப்பதாக ரகானே பேசினார். அப்போது அவரிடம் இதற்கு முன் தம்மை விட அதிகமாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடிய அனுபவத்தை பற்றி ரோகித் சர்மா நிகழ்த்திய உரையாடல்கள் பின்ருமாறு.
இதையும் படிங்க:IND vs WI : புஜாராவுக்கு பதில் அவர் தான் ஆடணும், 2 அறிமுக வீரர்களுடன் – தனது முதல் டெஸ்ட் பிளேயிங் லெவனை வெளியிட்ட ஹர்பஜன்
ரோகித்: நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு நிறைய முறை வந்து இங்குள்ள மைதானங்களில் அதிக ரன்கள் அடித்துள்ளீர்கள். எனவே இந்த சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக வந்துள்ள இளம் வீரர்களுக்கு உங்களுடைய ஆலோசனை என்ன
ரஹானே: இங்கே ரன்கள் அடிக்க மிகவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதே இளம் வீரர்களுக்கு என்னுடைய ஆலோசனையாகும். அத்துடன் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது களத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உங்களுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.