மனுஷனாய்யா நீயெல்லாம், பாவமான சஹாலை வெறியுடன் அடித்த ரோஹித் சர்மா – சிரித்த விராட் கோலி

Chahal
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 (2) என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் 2019க்குப்பின் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடித்து நிம்மதி பெருமூச்சு விட்டது.

குறிப்பாக 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வீழ்ச்சியை சந்தித்துள்ள அந்த அணி மறுமலர்ச்சி காணும் வகையில் இந்த வெற்றியை பதிவு செய்து புத்துணர்ச்சி அடைந்துள்ளது என்றே சொல்லலாம். ஆனால் மறுபுறம் சொந்த மண்ணில் 2023 உலகக் கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்படும் இந்தியா பலவீனமான வெஸ்ட் இண்டீஸிடம் இப்படி தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக உலகக்கோப்பைக்கு 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் இன்னும் நிலையான அணியை களமிறக்காமல் இந்தியா சோதனைகளை செய்து கொண்டிருப்பது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அடித்த ரோஹித் சர்மா:
அதிலும் முதல் போட்டியில் 12 வருடங்கள் கழித்து 7வது இடத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2வது போட்டியில் ஓய்வெடுத்து தங்களது இடத்தை கொடுத்தனர். அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்த வேண்டிய இளம் வீரர்களில் இஷான் கிசான் அரை சதமடித்து 90/0 என்ற நல்ல துவக்கத்தை கொடுத்தும் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், அக்ஸர் பட்டேல், பாண்டியா போன்ற முக்கிய வீரர்கள் சொதப்பியதால் இந்தியா 181 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

அதனால் இங்கேயே திணறும் இந்தியா நிச்சயமாக சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையையும் வெல்லப்போவதில்லை என்று மனதை தேற்றிக்கொள்ள துவங்கியுள்ளனர். முன்னதாக பார்படாஸ் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் விளையாடாத விராட் கோலி இடையிடையே கூல்டிரிங்ஸ் தூக்கியது ரசிகர்கள் திரும்பி பார்க்கும் வகையில் அமைந்தது. அதைத்தொடர்ந்து பெவிலியனில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவருடைய அருகில் ஜெய்தேவ் உனட்கட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அமர்ந்தனர்.

- Advertisement -

அப்போது இடது புறத்தில் அமர்ந்திருந்த மற்றொரு வீரர் சஹால் கழுத்தைப் பின்புறமாக பிடித்து தலையிலும் முதுகிலும் சரமாரியாக அடித்தது நேரலையில் பதிவானது. அதனால் யார் அப்படி அடிக்கிறார்கள் என்று கேமராமேன் சற்று இடப்புறமாக கேமராவை திருப்பிய போது கேப்டன் ரோஹித் சர்மா தான் அவரை முதுகில் தொடர்ந்து அடி மேல் அடி கொடுத்தது தெரிய வந்தது. அதனால் அந்த வலியை தாங்க முடியாத சஹால் “மனுசனாய்யா நீயெல்லாம்” என்ற வகையில் முதுவை வளைத்துக் கொண்டு கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை திட்டவும் முடியாமல் போட்டியை பார்த்தார்.

அப்போது விராட் கோலி மற்றும் உனட்கட் ஆகியோர் சிரிப்பை அடக்க முடியாமல் போட்டியை தொடர்ந்து பார்த்தனர். பொதுவாகவே ஜாலியான கேரக்டராக கருதப்படும் சஹால் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் அடிக்கடி ஜாலியாக வம்பிழுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் என்பதை அனைவருமே அறிவோம். அந்த வகையில் விளையாட்டுக்காக ஏதோ சொன்ன காரணத்தால் கேப்டன் ரோகித் சர்மா அப்படி வெறித்தனமாக அடித்திருப்பார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:நாட்டுக்காக பும்ராவ பாத்தது போதும், இவங்கல்லாம் காயமே பட்டாலும் பணத்துக்காக அங்க தான் விளையாடுவாங்க – கபில் தேவ் விமர்சனம்

அது போக ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு தயாரான போதும் கோபத்துடன் பேசும் வகையில் சஹால் சேட்டையை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெறுகிறது. அதில் தோல்வியை தவிர்த்து கோப்பையை வெல்வதற்கு நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடுவதால் ரோகித் சர்மா, விராட் கோலி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement