நாட்டுக்காக பும்ராவ பாத்தது போதும், இவங்கல்லாம் காயமே பட்டாலும் பணத்துக்காக அங்க தான் விளையாடுவாங்க – கபில் தேவ் விமர்சனம்

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகாலமாக துவங்க உள்ளது. அதில் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. ஆனாலும் முக்கியமான போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற போன்ற முதுகெலும்பு வீரர்கள் சொதப்பலாக செயல்பட்டு கை விடுவது இத்தனை வருடங்கள் கழித்தும் சமீபத்திய 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மீண்டும் அரங்கேறியது.

Bumrah

- Advertisement -

சரி இளம் கிரிக்கெட் வீரர்கள் அசத்துவார்கள் என்று பார்த்தால் 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறிய பலவீனமான வெஸ்ட் இண்டீஸிடம் நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டியில் படுதோல்வியே பரிசாக கிடைத்தது. இவை அனைத்தையும் விட ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முதன்மை வீரர்கள் உலகக்கோப்பை துவங்க 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் இன்னும் முழுமையாக குணமடையாதது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைகிறது.

கபில் தேவ் விமர்சனம்:
அதிலும் குறிப்பாக முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் கருப்பு குதிரையாகவும் கருதப்படும் பும்ரா 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சந்தித்த காயத்திலிருந்து 2 முறை குணமடைந்து ஓரிரு போட்டிகளில் விளையாடி மீண்டும் காயமடைந்து வெளியேறியதை அனைவரும் அறிவோம். ஆனால் 2022 செப்டம்பரில் காயமடைந்து வெளியேறிய அவர் சுமார் ஒரு வருடங்களாகியும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நாட்டுக்காக பும்ரா விளையாடுவார் என்று காத்திருந்தது போதும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக அவரைப் போன்ற வீரர்கள் லேசான காயத்தை சந்தித்தாலும் பணத்துக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதாகவும் நாட்டுக்காக விளையாடாமல் ஓய்வெடுப்பதாகவும் அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இதை பிசிசிஐயையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பும்ராவுக்கு என்னவாயிற்று? மிகுந்த தன்னம்பிக்கையுடன் குணமடைவதற்கான வேலைகளை துவங்கிய அவர் ஒருவேளை உலகக் கோப்பை முதன்மைப் போட்டிகளில் விளையாடாமல் போனால் அவருக்காக நாம் காத்திருந்தது வீணாகிவிடும்”

- Advertisement -

“அதே போல மிகச் சிறந்த வீரரான ரிஷப் பண்ட் விளையாடியிருந்தால் இந்தியா இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கும். என்னுடைய காலத்தில் கடவுள் ஆசீர்வாதத்தால் நான் அதிக காயங்களை சந்தித்ததில்லை என்று அர்த்தமல்ல. ஆனால் இன்று வருடத்தின் 10 மாதங்களில் பெரும்பாலான வீரர்கள் பல்வேறு கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர். எனவே அந்த சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு நாம் கொடுக்கலாம். ஆனாலும் ஒவ்வொரு வீரர்களும் முதலில் தங்களை பார்க்க வேண்டும்”

kapildev

“மேலும் ஐபிஎல் மிகச் சிறந்தது என்றாலும் அது உங்களை பாழாக்க கூடியதாகும். ஏனெனில் லேசான காயத்தை சந்தித்தாலும் நீங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர். ஆனால் அதே லேசான காயமிருந்தால் நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுவதில்லை. மாறாக நீங்கள் வெளிப்படையாக ஓய்வெடுக்கிறீர்கள். அதாவது நீங்கள் லேசான காயத்தை சந்தித்திருந்தாலும் ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டியாக இருந்தால் கண்டிப்பாக விளையாடுகிறீர்கள்”

- Advertisement -

“இது போன்ற சூழ்நிலைகளில் ஒரு வீரர் எவ்வளவு கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை நம்முடைய வாரியமும் புரிந்து கொள்ள வேண்டும். அது தான் வரம்பு முறையாகும். இன்று உங்களிடம் பணம் மற்றும் வசதிகள் இருந்தாலும் 4 – 5 வருடங்களைக் கொண்ட காலண்டர் இல்லை. எனவே நம்முடைய வாரியத்திடமும் ஏதோ ஒரு தவறு இருக்கிறது” என்று கூறினார்.

Jasprith Bumrah vs KKR

இதையும் படிங்க: 50 ஓவர் உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்கும். ஆனா.. – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

முன்னதாக 2019 – 2022 வரையிலான காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 95% போட்டிகளில் விளையாடிய பும்ரா அதே காலகட்டத்தில் இந்தியாவுக்காக 10 போட்டிகளில் கூட விளையாடவில்லை. அதனால் இவர் பணத்திற்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் நாட்டுக்காக காயமடைந்து வெளியேறி விடுவார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement