- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வீடியோ : விராட் கோலியின் தவறை சரி செய்து தோனி ஸ்டைலில் ஸ்டம்பிங் செய்து அசத்திய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டிசம்பர் 14ஆம் தேதியன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, அஷ்வின் 58 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவித்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் மெஹதி ஹாசன் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் முதல் பந்திலிருந்தே இந்திய பவுலர்களிடம் பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது.

அதிகபட்சமாக முஸ்பிக்கர் ரஹீம் 28 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை எடுத்தார். அதை தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 258/2 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக 1443 நாட்கள் கழித்து சதமடித்த புஜாரா 102* ரன்களும் இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சதமடித்து 110 ரன்களும் குவித்தனர். அதைத்தொடர்ந்து 513 என்ற கடினமான இலக்கை துரத்தும் வங்கதேசம் 4வது நாள் முடிவில் 272/6 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

அசத்திய பண்ட்:
124 ரன்கள் சாதனை ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த அந்த அணிக்கு சாண்டோ 67 ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் ஜாகிர் ஹாசன் அறிமுக போட்டியிலேயே சதமடித்து 100 ரன்கள் குவித்து அவுட்டானார். அவர்களுக்குப் பின் யாசிர் அலி 5, லிட்டன் தாஸ் 19, ரஹிம் 23 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் கேப்டன் ஷாகிப் 40* ரன்களுடன் மெஹதி ஹசன் 9* ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். அந்த அணிக்கு இன்னும் 241 ரன்கள் தேவைப்படும் நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு கடைசி நாளில் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

முன்னதாக இப்போட்டியில் 124 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு பெரிய தொல்லை கொடுத்த சாண்டோ ஒரு வழியாக உமேஷ் யாதவ் வீசிய பந்தில் எட்ஜ் கொடுத்தார். அது நேராக முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலியிடம் சென்ற நிலையில் அதை தவறாக பிடித்த அவர் கோட்டை விட்டார். நல்ல வேளையாக பக்கத்தில் ரிஷப் பண்ட் அதை உன்னிப்பாக கவனித்து பின்னோக்கி சென்ற பந்தை முதலில் இடது கையில் பிடித்து பின்னர் வலது கையும் சேர்த்து லாவகமாக பிடித்து இந்தியா முதல் விக்கெட்டை எடுக்க முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

மிகவும் தொல்லை கொடுத்த அந்த ஜோடி ஒருவழியாக அவுட்டானதால் அதற்கு முக்கிய காரணமாக அமைந்த ரிஷப் பண்ட்டை கேப்டன் ராகுல் கையெடுத்து கும்பிட்டு “நல்லவேளை நீயாவது பிடித்தாய்” என்ற வகையில் பாராட்டினார். அத்துடன் யாசிர் அலி 5, ரஹீம் 23 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை செட்டிலாக விடாமல் சீரான இடைவெளியில் அவுட் செய்த அக்சர் படேல் வீசிய ஒரு பந்தை அடுத்து வந்த நூருல் ஹசன் நூலிலையில் தவற விட்டார்.

அது நேராக விக்கெட் கீப்பரின் கைகளில் தஞ்சமடைந்தது. அதைக் கச்சிதமாக பிடித்திருந்த ரிசப் பண்ட் நுருள் ஹசன் வெள்ளை கோட்டுக்கு வெளியே ஒரு இன்ச் காலை வெளியே எடுத்த நேரத்தில் கச்சிதமாக ஸ்டம்பிங் செய்தார். அதை சோதித்துப் பார்த்த அம்பயர் குறிப்பிட்ட நேரத்தில் வெள்ளை கோட்டிற்கு வெளியேவும் காற்றிலும் பேட்ஸ்மேன் கால் இருந்ததால் அவுட் கொடுத்தார். அந்த வகையில் முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் விக்கெட் கீப்பர் தோனி போல கண்ணிமைக்கும் நேரத்தில் நூலிலையில் அவுட் செய்த ரிஷப் பண்ட் மீண்டும் இந்தியா விக்கெட் எடுக்க முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: IND vs BAN : சரித்திரத்தை மாற்றி எழுதிய வங்கதேச ஜோடி வெற்றிக்கு போராட்டம்? கடைசி நாளில் சாதிக்குமா இந்தியா – விவரம் இதோ

முன்னதாக பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 48/3 என தடுமாறிய போது 5 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட அவர் தமக்கே உரித்தான அதிரடி பாணியில் 46 (45) ரன்கள் குவித்து அசத்தினார். இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் பாராட்டும் வகையில் செயல்படும் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மட்டும் தடுமாறுவது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைகிறது.

- Advertisement -
Published by