உச்ச கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 20ஆம் தேதி நடைபெற்ற 68வது லீக் போட்டியில் கொல்கத்தாவை வெறும் 1 வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு 3வது அணியாக தகுதி பெற்று அசத்தியது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ நிக்கோலஸ் பூரான் 58 (30) ரன்கள் எடுத்த உதவியுடன் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய் 45 (28), வெங்கடேஷ் ஐயர் 24 (15) என தொடக்க வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தனர்.
ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் நித்திஷ் ராணா 8, ரஹ்மத்துல்லா குர்பாஸ் 10, ஆண்ட்ரே ரசல் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் வழக்கம் போல நங்கூரமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி வெறித்தனமாக போராடிய ரிங்கு சிங் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 67* (33) ரன்கள் எடுத்தும் 1 ரன்னில் வெற்றியை நழுவ விட்ட கொல்கத்தா லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
ரிங்கு சிங் பதிலடி:
முன்னதாக இம்மாத துவக்கத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியுடன் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் இறுதியில் கௌதம் கம்பீர் சண்டைக்கு வந்ததையும் யாராலும் மறக்க முடியாது. அந்த சர்ச்சையான நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்தும் அந்த மூவருமே இன்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோதி வருகின்றனர்.
Eden Chants "Kohli Kohli" when Naveen ul haq comes to bowl or fields near crowd #KKRvsLSG #Rinku #naveenulhaq pic.twitter.com/88EBYGl1He
— Humdum (@Humdum_16) May 20, 2023
அது போக தங்களுடைய நாட்டுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலியிடம் சண்டை போட்ட நவீன்- உல்-ஹக்கை ஹைதராபாத் போன்ற இதர மைதானங்களில் இருக்கும் இந்திய ரசிகர்களும் விடாமல் “கோலி கோலி” என்று ஆரவாரம் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் நேற்றைய போட்டியில் இந்தியா தோற்றதற்காக மைதானத்தையே கொளுத்திய வரலாற்றை கொண்ட கொல்கத்தா ரசிகர்கள் முதல் முறையாக நவீன்-உல்-ஹக் பந்து வீச வந்த போது “கோலி கோலி” என்று கூச்சலிட்டு பதிலடி கொடுத்தனர்.
அதனால் கடுப்பான அவர் இன்னும் சத்தமாக கத்துங்கள் என்ற வகையில் சொல்லி விட்டு சென்ற நிலையில் 14வது ஓவரில் ரஹ்மத்துல்லா குர்பாஸ் கொடுத்த கேட்சை பிடிக்க சென்றார். இருப்பினும் அந்த சமயத்தில் ரவி பிஷ்னோய் சரியாக வந்து தடுமாறினாலும் விடாமல் கேட்ச் பிடித்தார். ஆனால் சிறப்பான கேட்ச் பிடித்த அவர் கூட பெரிய அளவில் கொண்டாடாத நிலையில் சம்பந்தமின்றி கொல்கத்தா ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு வாய் மீது கை வைத்து மிரட்டிய நவீன்-உல்-ஹக் வெறித்தனமாக கொண்டாடினார். அது சமூக வலைதளங்களில் மீண்டும் இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
The slower ball 👌
The catch 🫣
The celebration 🤫It's all happening in #KKRvLSG 👀#TATAIPL #IPLonJioCinema #EveryGameMatters pic.twitter.com/YGVwIKHWbZ
— JioCinema (@JioCinema) May 20, 2023
குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு வாய் மீது கை வைத்து மிரட்டிய கௌதம் கம்பீருக்கு லக்னோ மைதானத்தில் கூச்சலிட்ட ரசிகர்களை அதே போல் வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு சொன்ன விராட் கோலி தக்க பதிலடி கொடுத்தார். இருப்பினும் அப்படி கம்பீர் – கோலி என்ற 2 ஜாம்பவான் இரு துருவங்களாக மோதி கொண்டதில் ஒரு போட்டி உள்ளது என்றே சொல்லலாம்.
ஆனால் எதுவுமே சாதிக்காத இவர் விராட் கோலிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டியில் அவ்வாறு செயல்பட்டார். அந்த நிலைமையில் கடைசி நேரத்தில் தனி ஒருவனாக வெற்றிக்கு போராடிய ரிங்கு சிங் 19வது ஓவரில் சிக்கிய நவீன்-உல்-ஹக்கை 4, 4, 4, 2, 6 என 20 ரன்களை விளாசினார்.
இதையும் படிங்க: IPL 2023 : தோனி, டிகே, மில்லர் உள்ளிட்ட அனைவரையும் மிஞ்சிய ரிங்கு சிங் – லேட்டஸ்ட் ஃபினிஷராக படைத்த 3 சாதனை இதோ
அதிலும் 5வது பந்தில் நவீன்-உல்-ஹக் முகத்தில் அறைந்தது போல் 110 மீட்டர் மெகா சிக்ஸரை பறக்க விட்டு அரை சதமடித்த அவர் கடைசி ஓவரிலும் 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு முடிந்தளவுக்கு தனது அணியின் வெற்றிக்கு போராடினார். அப்படி களத்திற்கு வெளியே பதிலடி கொடுத்த எங்களை விட களத்திற்குள் மெகா சிக்ஸரால் நவீனுக்கு தக்க பதிலடி கொடுத்த நீங்கள் கிரேட் என்று ரிங்குவை விராட் கோலி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.



