வீடியோ : அதனால் தான் நீங்க லெஜெண்ட், நேரலையில் பேட்ஸ்மேன் அவுட்டாவதை முன்பே கணித்த பாண்டிங் – ரசிகர்கள் வியப்பு

Ricky Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா அடுத்ததாக அந்நாட்டிற்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2023 ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற தற்போது புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள இவ்விரு அணிகளும் இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. அதை விட 2018ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கை கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின் 5 வருடங்கள் கழித்து மீண்டும் இப்போது தான் இவ்விரு அணிகளும் மோதுவதால் அனைவரது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அந்த நிலைமையில் உலகப் புகழ் பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 17ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் பச்சை புற்களுடன் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த காபா மைதானத்தில் அனல் பறக்க பந்து வீசிய ஆஸ்திரேலியாவிடம் பதில் சொல்ல முடியாத தென்னாப்பிரிக்கா சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 152 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

கேப்டன் டீன் எல்கர் 3, எர்வீ 10, வேன் டெர் டுஷன் 5, ஜாண்டோ 0 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வேரின் 64 ரன்களும் தெம்பா பவுமா 38 ரன்களும் எடுத்தனர். அந்தளவுக்கு அட்டகாசமாக பந்து வீசிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்காட் போலண்ட் மற்றும் கேப்டன் பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

லெஜெண்ட் பாண்டிங்:

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் பந்து வீசிய தென்னாப்பிரிக்காவின் ரபாடா முதல் பந்திலேயே டேவிட் வார்னரை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அத்துடன் லபுஸ்ஷேன் 11, கவாஜா 11 என முக்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 27/3 என தடுமாறிய அந்த அணிக்கு 4வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களில் அவுட்டானாலும் டிராவிஸ் ஹெட் 78* (77) ரன்களை அதிரடியாக எடுத்ததால் முதல் நாள் முடிவில் 145/5 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா 7 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் தென்னாபிரிக்க வீரர் மார்கோ யான்செனை ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் எப்படி அவுட் செய்யப் போகிறார் என்று வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் மற்றும் கேப்டன் ரிக்கி பாண்டிங் முந்தைய பந்தில் கணித்தது அப்படியே அடுத்த பந்தில் நடந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அது பற்றி நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போதைய நிலையை பற்றி பேசும் போது மிட்செல் ஸ்டார்க் ஏற்கனவே யான்செனுக்கு எதிராக துல்லியமாக பந்து வீசி அழுத்தத்தை உருவாக்கியுள்ளார். பொதுவாக இது போல் ஒருபுறம் நீங்கள் அழுத்தம் கொடுத்தாலே எதிர்ப்புறத்தில் உங்களுக்கு விக்கெட் கிடைக்கும். தன்னுடைய 4வது ஓவரின் பாதியில் நேதன் லயன் உள்ளார். இது வரை அவர் 8 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். அத்துடன் மிட் ஆன் ஃபீல்டரை அவர்கள் முக்கால்வாசி முன்னோக்கி நகர்த்தியுள்ளார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணியினர் அவரை (யான்சென்) மேலே தூக்கி அடிக்க வைக்கும் ஆசையை உருவாக்கியுள்ளார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் அடுத்த பந்திலேயே மார்கோ யான்சென் தூக்கி அடித்த நிலையில் சற்று உள்ளே கொண்டுவரப்பட்ட மிட் ஆன் ஃபீல்டர் அதை கச்சிதமாக ஓடிச்சென்று கேட்ச் பிடித்தார். அதைப் பார்த்து ரசிகர்கள் ரிக்கி பாண்டிங் கணிப்பு துல்லியமாக இருந்ததை பார்த்து வியந்து போனார்கள்.

இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வினின் ஒரு சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ் – விவரம் இதோ

மேலும் அதனால் தான் நீங்கள் ஜாம்பவான் என்று சமூக வலைதளங்களில் அவரை மனதார பாராட்டுகிறார்கள். முன்னதாக கடந்த வாரம் இதய பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிக்கி பாண்டிங் தற்போது குணமடைந்து மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வர்ணையாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement