டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வினின் ஒரு சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ் – விவரம் இதோ

Kuldeep-and-Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சட்டகிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 404 ரன்கள் குவிக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணியானது 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

IND-vs-BAN

- Advertisement -

பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்யவே தற்போது 513 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் பங்களாதேஷ் அணி 272 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை இழந்துள்ளதால் கடைசி நாளில் அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 241 ரன்கள் தேவைப்படுகிறது. அதே வேளையில் இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவதால் இந்திய அணியே இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Kuldeep Yadav 1

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தமிழக வீரர் அஷ்வினின் சிறப்பான சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியுள்ளார். அதுகுறித்த தகவல் தற்போது இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் வங்கதேச மண்ணில் நடைபெற்றுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை சிறந்த பந்துவீச்சாக அஷ்வினுடைய பந்துவீச்சே சாதனையாக இருந்தது. அந்த வகையில் ஏற்கனவே அஷ்வின் வங்கதேச மண்ணில் 87 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே வங்கதேச மண்ணில் இந்திய பவுலரின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

இதையும் படிங்க : கே.எல் ராகுலை ஒன்னும் பண்ணமுடியாது. சுப்மன் கில்லை தான் வெளிய அனுப்பனும் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

இந்நிலையில் இந்த சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய பவுலரின் சிறப்பான பந்துவீச்சு ரெக்கார்டை தன்வசமாகியுள்ளார்.

Advertisement