கே.எல் ராகுலை ஒன்னும் பண்ணமுடியாது. சுப்மன் கில்லை தான் வெளிய அனுப்பனும் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதல் போட்டியில் நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்த வேளையில் நாளை நடைபெற உள்ள ஐந்தாவது நாளில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட ரோஹித் சர்மா இரண்டாவது போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்புவார் என்ற தகவல் அரசல் புரசலாக வெளியாக தற்போது அவரது இடம் குறித்த பேச்சுக்களே சமூக வலைதளத்தில் அதிகம் நிலவி வருகின்றன.

Shubman Gill 1

- Advertisement -

ஏனெனில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக மாற்று வீரராக முதல் டெஸ்டில் விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து அபாரமான பார்மை வெளிப்படுத்தி உள்ளார். அதேவேளையில் கே.எல் ராகுல் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக ரோகித் அணிக்கு திரும்பினால் வெளியேறப் போவது கே.எல் ராகுலா? அல்லது சுப்மன் கில்லா என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.

இதில் பலரும் சுப்மன் கில்லுக்கு ஆதரவாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனெனில் சதம் அடித்த அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் ரோஹித் சர்மா திரும்பினாலும் கே.எல் ராகுலை பின்னுக்கு தள்ளி சுப்மன் கில்லே ரோகித்துடன் துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் மாற்றாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் ரோகித் ஒருவேளை அணிக்கு திரும்பினால் சுப்மன் கில்லை தான் வெளியேற்ற வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Shubman Gill

சுப்மன் கில் இந்த போட்டியில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனாலும் ரோகித் சர்மா அணிக்கு திரும்பினால் கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரே துவக்க வீரர்களாக முதல் தேர்வாக இருப்பார்கள். ஏனெனில் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல் ராகுலை அவ்வளவு எளிதாக இரண்டாவது போட்டியிலிருந்து வெளியேற்றி விட முடியாது. அதோடு குறிப்பிட்ட சில போட்டிகளில் அவரிடம் இருந்து ரன்கள் வரவில்லை என்றாலும் ராகுல் மிகப்பெரிய வீரர் என்பதை நாம் மறுக்க முடியாது.

- Advertisement -

எனவே ஓப்பனர்களாக முதல் தேர்வாக ரோஹித்துடன் ராகுல் தான் களமிறங்குவார். சுப்மன் கில் இந்த போட்டியில் என்னதான் செஞ்சுரி அடித்திருந்தாலும் அடுத்த போட்டியில் ரோகித் அணிக்குள் வந்தால் அவர் காத்திருக்க வேண்டிய கட்டாயம் தான் வரும். ஏனெனில் ரஹானே போன்ற பெரிய வீரரே தற்போது அணியில் இடமில்லாமல் தனது இடத்திற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் வளர்ந்து வரும் இளம் வீரரான சுப்மான கில் நிச்சயம் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை வரலாம்.

இதையும் படிங்க : போதும் சாமி, எனக்கு ஐபிஎல்’லே வேணான்னு அவர் முடிவெடுத்துட்டாரு – முன்னாள் சிஎஸ்கே வீரரை பாராட்டும் டிகே

அதோடு பங்களாதேஷில் உள்ள ஆடுகளங்களில் இந்திய அணிக்கு ஆறு பேட்ஸ்மேன்கள் போதுமான ஒன்று. அதேவேளையில் ஐந்து பந்துவீச்சாளர்கள் அவசியம் என்பதனால் கே.எல் ராகுலை பின்னுக்கு தள்ள முடியாது. அவரை துவக்க வீரராக வைத்து சுப்மன் கில்லை தான் வெளியில் அமர வைக்க முடியும் என்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement