ஒழுங்கா மன்கட் கூட பண்ண தெரியல, வெற்றியை நழுவ விட்ட ஆர்சிபியை கலாய்த்த சேவாக், டேல் ஸ்டைன் – ரசிகர்கள்

RCB Mankad
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதியன்று பெங்களூவில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை தோற்கடித்த லக்னோ தன்னுடைய 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 212/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 61 (44), கேப்டன் டு பிளேஸிஸ் 79* (46) கிளன் மேக்ஸ்வெல் 59 (29) என அந்த அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களும் அதிரடியாக பெரிய ரன்களை குவித்தனர்.

அதை தொடர்ந்து 213 ரன்களை துரத்திய லக்னோவுக்கு முதல் முதல் ஓவரிலேயே கெய்ல் மேயர்ஸ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் தீபக் ஹூடா 9, க்ருனால் பாண்டியா 0 என முக்கிய பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 23/3 என திணறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 5 சிக்சருடன் 65 (30) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க எதிர்புறம் தடவலாக செயல்பட்ட கேப்டன் கேஎல் ராகுல் 18 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

சொதப்பிய ஆர்சிபி:
ஆனால் அடுத்த களமிறங்கிய நிக்கோலாஸ் பூரான் யாருமே எதிர்பாராத வகையில் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்து வெறும் 15 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த 2வது வீரராக சாதனை படைத்து 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 67 (19) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருடன் போராடிய ஆயுஷ் பாடோணி 4 பவுண்டரியுடன் 30 (24) ரன்களில் அவுட்டானதால் பரபரப்பு ஏற்பட்ட போட்டியில் கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.

ஹர்ஷல் படேல் வீசிய அந்த ஓவரில் ஜெயதேவ் உனட்கட் 9 (7) ரன்களிலும் மார்க் வுட் 1 (2) ரன்களில் அவுட்டானதால் மேலும் அனல் பறந்த அந்த போட்டியில் கடைசி பந்தில் லக்னோவுக்கு 1 ரன் தேவைப்பட்டது. அப்போது புதிதாக களமிறங்கிய ஆவேஷ் கான் பந்தை எதிர்கொள்ள காத்திருந்த நிலையில் பந்தை வீச வந்த ஹர்ஷல் படேல் பந்தை வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறம் ரவி பிஷ்னோய் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறுவதை கடைசி நொடியில் கவனித்தார்.

- Advertisement -

அதனால் நொடிப் பொழுதில் நின்று மன்கட் செய்ய செய்ய முயற்சித்து அவர் வேகமாக ஓடி வந்த காரணத்தால் ஸ்டம்பை தாண்டி சென்று விட்டார். அதன் காரணமாக மன்கட் ரன் அவுட் செய்ய முடியாமல் அவர் சொதப்பிய வேளையில் எதிர்ப்புறமிருந்து ரவி பிஷ்னோய் ரன் எடுக்க ஓடினார். அதனால் ரன் அவுட் செய்ய முயற்சித்த போது பிஷ்னோய் டைவ் அடித்து தன்னை காப்பாற்றிக் கொண்டதுடன் ஹர்ஷல் படேல் கோட்டை தாண்டி மன்கட் செய்ய முயற்சித்ததால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

இறுதியில் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில் கையுறையுடன் ஏற்கனவே தயாராக இருந்த தினேஷ் கார்த்திக் ஆவேஷ் கான் அடிக்காமல் விட்ட பந்தை சரியாக பிடிக்காமல் சொதப்பி தட்டுத் தடுமாறி கையில் எடுத்து எதிர்ப்புறம் ஓடிய ஆவேஷ் கானை ரன் அவுட் செய்ய தூக்கி போடுவதற்குள் லக்னோ அணியின் 2 பேட்ஸ்மேன்களும் வெற்றிகரமாக ரன்னை ஓடி தங்களது அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதை பார்த்த தென்னாபிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் நேரடியாக அவுட் செய்ய முடியாமல் மன்கட் முறையில் அவுட் செய்ய முயற்சித்ததன் கர்மா தான் இந்த தோல்வி என்று பெங்களூருவை ட்விட்டரில் கலாய்த்து பின்னர் அந்த ட்வீட்டை டெலிட் செய்து விட்டார்.

- Advertisement -

அதை விட சரியாக மன்கட் கூட செய்ய தெரியவில்லை என்று ஹர்ஷல் படேல் – தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் அவுட்டை தவறவிட்டதால் நூலிலையில் பெங்களூருவின் வெற்றி பறிபோனதாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: IPL 2023 : ரிங்கு சிங் இல்ல, நான் பார்த்ததிலேயே இது டி20 கிரிக்கெட்டின் பெஸ்ட் இன்னிங்ஸ் – இந்திய வீரரை பாராட்டிய லாரா, கெயில்

அதே சமயம் பூரானை அவர் மனதார பாராட்டியுள்ளார். மேலும் மன்கட் செய்வதை அஸ்வினை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று பெங்களூருவை கலாய்க்கும் ரசிகர்கள் அதை செய்திருந்தால் குறைந்தபட்சம் போட்டியை டை செய்து சூப்பர் ஓவரில் போராடியிருக்கலாம் என்று கலாய்க்கிறார்கள். மொத்தத்தில் வழக்கம் போல பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கி முக்கிய நேரத்தில் சொதப்பிய பெங்களூரு தங்களது சொந்த மைதானத்திலும் பரிதாபமாக தோற்றுள்ளது.

Advertisement