வீடியோ : ஓரமா போய் பேட்டி எடுங்கப்பா – வெறித்தன ஃபீல்டிங்கில் சிக்கி நேரலையில் விழுந்த பாக் தொகுப்பாளினி

Zainab Abbas
- Advertisement -

ஐபிஎல் தொடரை பார்த்து பல்வேறு நாடுகளில் துவங்கப்பட்ட புதிய டி20 தொடர்களில் புதுவராக தென்னாப்பிரிக்காவில் சிஎஸ்ஏ டி20 சேலஞ் எனும் கிரிக்கெட் தொடர் உருவாக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி துவங்கிய அத்தொடரில் ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்துள்ள சென்னை, ஹைதராபாத், லக்னோ, மும்பை, ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய அணி நிர்வாகங்கள் தான் பங்கேற்கும் மொத்த 6 அணிகளையும் வாங்கியுள்ளது. அதில் ஜனவரி 18ஆம் தேதியன்று நடைபெற்ற 12வது லீக் போட்டியில் எம்ஐ கேப் டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகள் மோதின.

தென்னாபிரிக்காவில் இருக்கும் மைதானங்களிலேயே மிகவும் அழகான மலைத்தொடர்களை பின்புலத்தில் கொண்ட நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய எம்ஐ கேப் டவுன் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 171/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிக்கேல்டன் 46 (36) ரன்களும் ரோல்ஆப்சென் 57 (36) ரன்களும் எடுக்க கடைசி நேரத்தில் போட்கிடெர் 21* (13) ரன்களும் ஓடென் ஸ்மித் 25* (13) ரன்களும் அதிரடியாக எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஜேஜே ஸ்மட்ஸ் 4, எர்வீ 19, கேப்டன் மார்க்ரம் 19, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 28 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஓரமா போங்க:
அதனால் 12.1 ஓவரில் 91/5 என சரிந்த அந்த அணியின் கதை முடிந்ததாகவே கருதப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் இளம் ஆல் ரவுண்டர் மார்க்கோ யான்சன் யாருமே எதிர்பார வகையில் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு போட்டியில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தினார். தொடர்ந்து வெளுத்து வாங்கிய அவர் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 66 (27) ரன்களை விளாசி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

அதனால் 19.3 ஓவரிலேயே 172/8 ரன்கள் எடுத்த சன் ரைசர்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கேப் டவுன் அணியை சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட் எடுத்த ரபாடாவின் போராட்டம் வீணானது. அப்படி வெறித்தனமாக பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் சாம் கரண் வீசிய 13வது ஓவரின் 5வது பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் அதிரடியான பவுண்டரியை பறக்க விட்டார். அதை இருபுறத்திலும் இருந்து வந்த பீல்டர்கள் வேகமாக வந்து தடுக்க முயற்சித்தார்கள்.

- Advertisement -

ஆனாலும் ராக்கெட் வேகத்தில் சென்ற அந்த பந்தை 2 பீல்டர்களாலும் தடுக்க முடியாததால் பவுண்டரிக்குள் சென்றது. குறிப்பாக அதில் ஒரு ஃபீல்டர் டைவ் அடித்து தடுக்க முயற்சித்த போது பவுண்டரி எல்லைக்குள் நின்று அந்த போட்டி பற்றி ஒரு பயிற்சியாளிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பிரபல பாகிஸ்தான் தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ் மீது மோதினார். பின் திசையிலிருந்து மோதிய வேகத்தில் நிலை தடுமாறிய அவர் அப்படியே பின்னாடி விழுந்தார்.

அதனால் பதற்றமடைந்த வர்ணனையாளர்கள் “உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே” என்று கேள்வி எழுப்பினார்கள். நல்ல வேளையாக அவர் காயத்தை எதுவும் சந்திக்காத காரணத்தால் உடனடியாக எழுந்து “நான் தப்பித்து விட்டேன் இனிமேல் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்” என்று சிரித்த முகத்துடன் சூழ்நிலையை சமாளித்தார். அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ஒளிபரப்பு நிறுவனம் “உங்களுக்கு ஒன்னும் ஆகவில்லையே” என்று கேட்டது.

இதையும் படிங்க: ஹர்டிக் பாண்டியாவின் இடத்துக்கு குறி வைத்து ரஞ்சி கோப்பையில் விஜய் சங்கர் செய்த மாஸ் சம்பவம் – கம்பேக் கொடுப்பாரா

அதற்கு “எப்படியோ நான் தப்பித்து விட்டேன். ஆனால் அந்த வலி எனக்குத்தான் தெரியும். அதற்காக நான் ஐஸ் கட்டிகளால் ஒத்திரம் கொடுத்துக் கொண்டேன்” என்று ஜாலியாக பதிலளித்தார். வரலாற்றில் நிறைய தருணங்களில் இது போல் வர்ணையாளர்கள் மீது எதிர்பாராத வகையில் களத்தில் விளையாடும் வீரர்கள் மோதிய நிகழ்வுகள் உள்ளது. அந்த வரிசையில் அரங்கேறிய இந்திய நிகழ்வும் சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement