ஹர்டிக் பாண்டியாவின் இடத்துக்கு குறி வைத்து ரஞ்சி கோப்பையில் விஜய் சங்கர் செய்த மாஸ் சம்பவம் – கம்பேக் கொடுப்பாரா

Vijay Shankar Hardik pandya
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான ரஞ்சி கோப்பையின் 2022/23 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் இதுவரை நடைபெற்ற 5 லீக் போட்டிகளில் 1 தோல்வி 4 ட்ரா பதிவு செய்து புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் தவிக்கிறது. அதைத்தொடர்ந்து தமிழகம் தன்னுடைய 6வது லீக் போட்டியில் அசாம் அணியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தமிழக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய தமிழக அணிக்கு சாய் சுதர்சன் 2 ரன்னிலும் பாபா அபாரஜித் 23 ரன்னிலும் அவுட்டானார்கள். இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 157 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த பாபா இந்திரஜித் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் நாராயன் ஜெகதீசன் மீண்டும் ஒருமுறை அற்புதமாக பேட்டிங் செய்து 14 பவுண்டரிகளுடன் சதமடித்து 125 ரன்கள் குவித்து அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரஞ்சன் பால் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் நிதானமாக செயல்பட்டு ரன்களை சேர்த்தனர்

- Advertisement -

ஹாட்ரிக் சம்பவம்:
நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று அசத்திய இந்த ஜோடி நன்கு செட்டிலாகி அசாம் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 5வது விக்கெட்டுக்கு 263 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தமிழகத்தை வலுப்படுத்தினர். அதில் ரஞ்சன் பால் 16 பவுண்டரியுடன் 153 (212) ரன்களில் அவுட்டான அடுத்த சில ஓவர்களில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் விஜய் சங்கர் 112 (187) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவர்களுக்குப்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் தமிழகம் 540 ரன்கள் குவித்தது. அசாம் சார்பில் அதிகபட்சமாக ரியான் பாராக் 4 விக்கெட் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய அசாம் தமிழகத்தின் தரமான பந்து வீச்சில் 266 ரன்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் பெற்றது. அதிகபட்சமாக புர்காயஸ்தா 74 ரன்கள் எடுத்த நிலையில் தமிழகம் சார்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 4 விக்கெட்கள் சாயத்தார். அதைத் தொடர்ந்து 274 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய அசாம் 3வது நாள் முடிவில் 66/0 ரன்களுடன் விளையாடி வருகிறது.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் சதமடித்த விஜய் சங்கர் மகாராஷ்டிரா மற்றும் மும்பைக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் முறையே 107 (214) மற்றும் 103 (174) ரன்களை குவித்து சதமடித்திருந்தார். அப்படி தொடர்ந்து 3 போட்டிகளில் 3 சதங்களை அடித்து ஹார்ட்ரிக் சதங்களை பதிவு செய்துள்ள அவர் நீண்ட நாட்களுக்குப் பின் உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார். முன்னதாக கடந்த 2019இல் இதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக காத்திருந்த அம்பத்தி ராயுடுவுக்கு பதில் 3 துறைகளிலும் அசத்தக்கூடிய முற்பரிமான வீரர் தேவை கண்ணோட்டத்துடன் விஜய் சங்கர் கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அந்த வாய்ப்பில் சுமாராகவே செயல்பட்ட அவர் அதன் பின் கம்பேக் கொடுக்கும் அளவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தவில்லை. சொல்லப்போனால் ஐபிஎல் தொடரில் 2022 சீசனில் கோப்பை வென்ற குஜராத் அணியில் ஸ்கூல் கிரிக்கெட்டரை விட மோசமாக செயல்பட்ட அவர் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானார். இருப்பினும் மனம் தளராமல் தற்போதைய ரஞ்சிக் கோப்பையில் ஹாட்ரிக் சதங்கள் அடித்துள்ள அவர் இதே போல் தொடர்ந்து செயல்பட்டு இந்திய டெஸ்ட் அணியில் காலியாக உள்ள ஹர்திக் பாண்டியா இடத்தைப் பிடிக்க போராட உள்ளார்.

இதையும் படிங்க: அவர் சிக்ஸர் அடிப்பதை பார்க்கும் போது தோனியை பார்க்கிற மாதிரியே இருக்கு – இளம் வீரரை பாராட்டும் சஞ்சய் மஞ்ரேக்கர்

ஏனெனில் முதுகு வலியால் கிட்டத்தட்ட டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்து விட்ட பாண்டியாவுக்கு பதில் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை இந்திய அணி நிர்வாகம் தேடிக் கொண்டிருக்கிறது. எனவே அதைப் பிடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புள்ளது என்றாலும் அதற்கு இதே போல் இன்னும் மும்மடங்கு செயல்பட வேண்டியது அவசியமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement