இதெல்லாம் தேவையா? திமிராக வாயை விட்டு மாட்டிய பாண்டியா – அடித்து நொறுக்கிய பூரான் மாஸ் பதிலடி

Nicholas Pooran vs Hardik Pandya
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. 2024 டி20 உலக கோப்பைக்கு தேவையான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று பதிலடி கொடுத்தது. ஆனாலும் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் தோற்ற இந்தியா 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டி20 தொடரிலும் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரிலும் முதல் முறையாக தலைகுனியும் தோல்வியை சந்தித்துள்ளது.

இத்தனைக்கும் ஐபிஎல் 2023 தொடரில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுடன் ஐசிசி டி20 தர வரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் தற்சமயத்தில் பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸிடம் இப்படி இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக ஐபிஎல் 2022 கோப்பையை கேப்டனாக வென்றதால் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியாவை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் வருங்கால கேப்டனாக தேர்வுக்குழு கருதி வருகிறது.

- Advertisement -

திமிரான பாண்டியா:
அதனாலேயே திமிராக நடந்து கொள்கிறார் என்று ரசிகர்கள் திட்டும் அளவுக்கு சமீப காலங்களாக சேட்டையான வேலைகளை செய்யும் பாண்டியா இந்த தொடரில் கேப்டனாக அக்சர் பட்டேல், சஹால் ஆகியோரை சரியாக பயன்படுத்தாதது ஆரம்பத்திலேயே தோல்வியை கொடுத்தது. அதை விட இத்தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய திலக் வர்மாவை 3வது போட்டியில் 50 ரன்கள் தொடங்கிடாமல் சுயநலமாக நடந்து கொண்ட அவருடைய செயலும் அனைவரிடமும் கோபத்தை ஏற்படுத்தியது.

அந்த வரிசையில் முதலிரண்டு போட்டிகளில் இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கிய நிக்கோலஸ் பூரான் பாண்டியாவையும் அதிரடியாக எதிர்கொண்டு வெஸ்ட் இண்டீஸை வெற்றி பெற வைத்தார். இருப்பினும் 3வது போட்டியில் ஓரளவு சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு உதவிய பாண்டியா அப்போட்டியின் முடிவில் “பூரான் என்னை அடிக்க விரும்பினால் தாராளமாக அடிக்கட்டும்” என்று பேட்டி கொடுத்து வம்பிழுக்கும் வேலையை தொடங்கினார்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் 5வது போட்டியில் முக்கிய நேரத்தில் அவரிடம் சென்று பாண்டியா ஏதோ சொல்லி மீண்டும் வம்பிழுத்தார். மறுபுறம் அதற்கு வாயில் எந்த பதிலும் சொல்லாத நிக்கோலஸ் பூரான் அமைதியாக காத்திருந்து 5வது போட்டியில் பாண்டியா வீசிய ஒரே ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியும் பறக்க விட்டு பேட்டில் பதிலடி கொடுத்தார். அந்த வகையில் ஒரு போட்டியுடன் அமைதியாக சென்றிருக்கக்கூடிய பூரானை வம்பிழுத்து கடைசி போட்டியில் 47 ரன்கள் அடிக்கும் அளவுக்கு ஸ்லெட்ஜிங் செய்து உத்வேகத்தை ஏற்படுத்திய பாண்டியா இந்தியா தோல்வியை சந்திக்க மறைமுக காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம்.

அத்துடன் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இனியாவது வாயை இழுத்து பூட்டி கொண்டு விளையாடுங்கள்” என்ற வகையில் கொடுத்த ரியாக்சனை அருகில் இருந்த அகில் ஹொசைன் பாண்டியாவுக்கு காற்றில் முத்தத்தின் வாயிலாக பறக்க விடுவது போன்ற வீடியோவையும் பதிவிட்டு நிக்கோலஸ் பூரான் மாஸ் பதிலடி கொடுத்துள்ளார். அது போக பாண்டியா ஸ்லெட்ஜிங் செய்த தருணத்தையும் அதற்கு சிகார்களால் பதிலடி கொடுத்த தருணத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிக்கோலஸ் பூரான் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:உலக கோப்பைக்கு தேர்வாகாத டீம்’கிட்ட தோத்துட்டீங்களே, ரொம்ப வலிக்குது – இந்தியாவை ஓப்பனாக தாக்கியதாக முன்னாள் வீரர்

அதை பார்க்கும் ரசிகர்கள் கேப்டனாக இதர வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைதியுடன் செயல்படுவதை விட்டுவிட்டு இப்படி அதீத தன்னம்பிக்கையால் திமிரால் வாயை விட்டு இந்தியாவுக்கு தோல்வியை பெற்றுக் கொடுக்கும் வேலையெல்லாம் தேவையா? என்று பாண்டியா மீது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும் ஒழுக்கத்தை சரியாக கடைபிடிக்காமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்யும் இவர் 2024 டி20 உலக கோப்பையில் எப்படி வெற்றி பெற்று கொடுக்கப் போகிறார் என்ற கவலையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement