வீடியோ : ஆர்சிபி தோல்வியை கொண்டாடிய மும்பை – கனவை நொறுக்கியும் சுப்மன் கில்லை கட்டிப்பிடித்து பாராட்டிய கிங் கோலி

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று பரபரப்பான போட்டிகளுடன் நிறைவு பெற்றுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முதல் 3 அணிகளாக தகுதி பெற்றது. அதனால் எஞ்சியிருந்த ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் போட்டி போட்டன. அதில் மே 21ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 69வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து பெங்களூருவின் தோல்விக்காக காத்திருந்தது.

அந்த நிலைமையில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்ததால் 4வது அணியாக மும்பை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு வழக்கம் போல முக்கிய வீரர்கள் ஏமாற்றிய நிலையில் தனி ஒருவனாக போராடிய விராட் கோலி சதமடித்து 101* (61) ரன்கள் குவித்தார். அதனால் பெங்களூரு நிர்ணயித்த 198 என்ற கடினமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு விஜய் சங்கர் 53 (35) ரன்களும் தொடக்க வீரர் சுப்மன் கில் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 104* (52) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

அதான் கிங்:
அதனால் மீண்டும் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறிய பெங்களூரு ஐபிஎல் வரலாற்றில் 16வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய கடந்த போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த விராட் கோலி இந்த போட்டியிலும் முழுமூச்சுடன் போராடி சதமடித்தும் வெற்றி கிடைக்காததால் மனமுடைந்து பெவிலியினில் அமர்ந்திருந்ததை பார்க்கும் அனைத்து ரசிகர்களின் நெஞ்சங்களும் உடைந்து போகிறது என்றே சொல்லலாம்.

இருப்பினும் 15 வருடங்களாக தோல்வியை பார்த்து பழகிப் போய்விட்ட அவர் அந்த வலியை மனதிற்குள் வைத்துக் கொண்டு போட்டி முடிந்ததும் வழக்கம் போல இரு அணி வீரர்கள் கை கொடுத்துக் கொண்ட போது தங்களது கனவை சுக்கு நூறாக உடைத்த சுப்மன் கில்லுக்கு சிரித்த முகத்துடன் கை கொடுத்து கட்டிப்பிடித்து பாராட்டினார். குறிப்பாக சமீப காலங்களில் சர்வதேச அளவிலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் இந்த ஐபிஎல் தொடரிலும் 2 சதங்கள் அடித்து அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதனால் தமக்கு அடுத்தபடியாக இந்தியாவின் வருங்காலம் சுப்மன் கில் தான் என்று கடந்த சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பாராட்டிய விராட் கோலி இந்த போட்டியில் ரசிகர்களின் கண் முன்னே நேரடியாக பாராட்டினார். அப்படி தங்களை தோற்கடித்த எதிரணி வீரரையும் பாராட்டிய விராட் கோலியின் மனதை பார்த்த ரசிகர்கள் அதனால் தான் நீங்கள் கிங் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் போட்டி முடிந்ததும் குஜராத்தின் நம்பிக்கை நட்சத்திரம் ரசித் கான் கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக விராட் கோலியிடம் இருந்து வாங்கினார். அதே போல் நிறைய குஜராத் இளம் வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த விராட் கோலி ஜென்டில்மேனாக ஜாம்பவானாக நடந்து கொண்டார்.

இதையும் படிங்க:வீடியோ : ஆணவத்தின் உச்சம், விராட் கோலியின் ஆர்சிபி தோல்வியை வெறித்தனமாக சிரித்து கொண்டாடிய ஆப்கன் வீரர் – ரசிகர்கள் கோபம்

அதை விட தாங்கள் பிளே ஆப் செல்வதற்கு பெங்களூரு தோற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மும்பை அணியினர் குஜராத் வென்றதும் துள்ளி குதித்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஆரவாரம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதையடுத்து மே 23ஆம் தேதி நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகளும் மே 24இல் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகளும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement