வீடியோ : பாண்டியாவின் ஈகோவுடன் விளையாடிய தல தோனி – திட்டம் போட்டு தூக்கிய பலே கேப்டன்ஷிப்

MS Dhoni Field
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2 மாதங்களாக நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து மே 23ஆம் தேதியான நேற்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்புச் சாம்பியன் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த முன்னாள் சாம்பியன் சென்னை மே 28ஆம் தேதி நடைபெறும் ஃபைனலுக்கு நேரடியாக முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னை சவாலான பிட்ச்சில் போராடி 20 ஓவர்களில் 172/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 60 (44) ரன்களும் டேவோன் கான்வே 40 (34) ரன்களும் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய குஜராத் ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய சென்னை பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

பலே கேப்டன்ஷிப்:
அதிகபட்சமாக தொடக்க வீரர் சுப்மன் கில் 42 (38) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், தீக்சனா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதனால் வரலாற்றில் 10வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற சென்னை தங்களை வெற்றிகரமான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அப்படி 10 முறை சென்னையை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றதில் தோனியின் கேப்டன்ஷிப் முக்கிய காரணமாக இருந்தது என்பதை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் நேற்றைய போட்டியிலும் பவுலர்களை மாற்றி மாற்றி சரியாக பயன்படுத்தி ஃபீல்டர்களை சரியாக செட்டப் செய்து சேசிங் செய்வதற்கு பெயர் போன குஜராத்தை சுருட்டிய அவருடைய கேப்டன்ஷிப் அபாரமாக இருந்தது.

அதற்கு சிறிய எடுத்துக்காட்டாக அப்போட்டியில் 173 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சஹா ஆரம்பத்திலேயே 12 ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரியுடன் அதிரடியை துவக்கிய நிலையில் பவர் பிளே ஓவர் முடிவதற்கு முன்பாகவே 6வது ஓவரில் ஸ்பின்னரான தீக்சனாவை முன்கூட்டியே தோனி பந்து வீச அழைத்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் கில் சிங்கிள் எடுத்த நிலையில் 4வது பந்தை எதிர்கொண்ட பாண்டியா ஸ்கொயர் திசைக்கு முன்பு அடித்தும் அதை மொய்ன் அலி விரைவாக தடுத்ததால் ரன் எடுக்க முடியவில்லை.

- Advertisement -

அந்த குறிப்பிட்ட ஷாட்டை கவனித்த தோனி பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் இருந்த ஜடேஜாவை பேக்வேர்ட் பாய்ண்ட் பகுதிக்கு வந்து ஃபீல்டிங் செய்ய சொன்னார். அதாவது முந்தைய பந்து காற்றில் சென்ற இடத்தில் இம்முறை ஜடேஜாவை மாற்றி தோனி நிற்க வைத்தார். அந்த நிலையில் 5வது பந்தை தீக்சனா சற்று இழுத்து 4வது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பவுண்டரி அடிக்கும் ஆசையை காட்டும் வகையில் வீசினார். அதற்கேற்றார் போலவே ஹர்திக் பாண்டியா இழுத்து அடிக்க முயற்சித்தும் சரியாக கனெக்ட் ஆகாமல் எட்ஜ் கொடுத்ததால் நேராக தோனி நிறுத்திய ஜடேஜாவின் கைகளுக்கு சென்ற பந்து கேட்ச்சாக மாறியது.

அதனால் தெரிந்தே தோனியின் வலையில் சிக்கியது போல் அவுட்டான பாண்டியா 8 (7) ரன்களுடன் ஏமாற்றத்துடன் சென்றார். அந்த தருணத்தை தொலைக்காட்சியில் வர்ணனை செய்த ரவி சாஸ்திரி “அந்த சமயத்தில் தோனி ஹர்திக் பாண்டியாவின் ஈகோவுடன் விளையாடி வென்றார்” என்று பாராட்டினார்.

இதையும் படிங்க: CSK vs GT : பிட்ச்ல இந்த ஹெல்ப் மட்டும் கெடைச்சிச்சு அவரை சமாளிக்குறது ரொம்ப கஷ்டம் – ஜடேஜாவை புகழ்ந்த தோனி

வரலாற்றில் இப்படி பல தருணங்களில் தோனி திட்டம் போட்டு ஃபீல்டர்களை மாற்றிய அடுத்த பந்தில் நிறைய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்துள்ளனர். அந்த வரிசையில் இந்த முக்கியமான போட்டியில் எதிரணியின் கேப்டனை அவர் திட்டம் போட்டு வீழ்த்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement