CSK vs GT : பிட்ச்ல இந்த ஹெல்ப் மட்டும் கெடைச்சிச்சு அவரை சமாளிக்குறது ரொம்ப கஷ்டம் – ஜடேஜாவை புகழ்ந்த தோனி

Dhoni-and-Jadeja
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான போட்டியான முதலாவது குவாலிஃபயர் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Deepak Chahar

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பாக துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களையும், டேவான் கான்வே 40 ரன்களையும் குவித்தனர். பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது :

20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே குவித்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சென்னையின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் பேட்டிங்கில் 16 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஸ்கோரை அதிகப்படுத்த உதவினார்.

Ravindra Jadeja

அதேபோன்று பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் நான்கு ஓவர்கள் முழுமையாக வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக குஜராத் அணியின் அதிரடி பினிஷரான டேவிட் மில்லரை அவர் வந்த வேகத்திலேயே 4 ரன்கள் எடுத்திருந்த வேளையில் கிளீன் போல்ட்டாக்கி வெளியேற்றினார். மேலும் தசுன் ஷனக்காவையும் வீழ்த்தி இருந்தார்.

- Advertisement -

இப்படி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அசத்திய ஜடேஜாவை போட்டி முடிந்த பின்னர் வெற்றி குறித்து பேசிய சென்னை கேப்டன் தோனியும் பாராட்டி இருந்தார். ஜடேஜா குறித்து தோனி கூறுகையில் : ஜடேஜாவிற்கு மட்டும் மைதானம் உதவி புரிந்தால் அவரை இந்த மைதானத்தில் எதிர்கொள்வது கடினம். இந்த மைதானத்தில் அவர் பந்துவீசும் போது அவருக்கு க்ரிப் கிடைத்து பந்து டர்ன் ஆனால் அவரை எதிர்கொண்டு பேட்ஸ்மேன்கள் பெரிய ஷார்ட் விளையாட முடியாது.

இதையும் படிங்க : CSK vs GT : அவ்ளோ ஈஸியா பைனலுக்கு போய்ட்டோம்னு சொல்லவே மாட்டேன். வெற்றிக்கு பிறகு தோனி பேசியது என்ன?

அந்த வகையில் இன்றைய போட்டியில் அவரது பந்துவீச்சு போட்டியே மாற்றியது. அவரது பந்துவீச்சு எங்களது வெற்றிக்கு கைகொடுத்தத்த்து. அதேபோன்று பேட்டிங்கிலும் மொயின் அலியுடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப்பை மறக்கக்கூடாது என ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை தோனி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement