CSK vs GT : அவ்ளோ ஈஸியா பைனலுக்கு போய்ட்டோம்னு சொல்லவே மாட்டேன். வெற்றிக்கு பிறகு தோனி பேசியது என்ன?

MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிஃபயர் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

CSK vs GT

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களையும், டேவான் கான்வே 40 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே குவித்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமான வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

Deepak Chahar

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில்: எங்களுடைய அடுத்த பைனல் இது என்று எளிதாக கூற முடியாது. ஏனெனில் முன்பெல்லாம் எட்டு அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் மோதும். ஆனால் தற்போது பத்து அணிகள் மோதுகின்றன. எனவே இது இந்த வெற்றியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

- Advertisement -

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அனைவரது கடுமையான உழைப்பிற்கு பிறகு கிடைத்த இடம் இது. எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே இந்த வெற்றியில் பங்களித்துள்ளனர். நிச்சயம் இந்த தொடரில் எங்களது மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : CSK vs GT : இங்கே மீண்டும் வந்து சேப்பாக்கத்தில் விளையாடுவீர்களா? – தோனி அளித்த நேரடி பதில் இதோ

குஜராத் அணி சேஸிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்த போட்டியில் அவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் குஜராத் அணியை வீழ்த்தி நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சி என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement