CSK vs GT : இங்கே மீண்டும் வந்து சேப்பாக்கத்தில் விளையாடுவீர்களா? – தோனி அளித்த நேரடி பதில் இதோ

MS-Dhoni
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான பிளே ஆப் சுற்றின் முதலாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சென்னை அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றதுடன் நேரடியாக முதல் அணியாக அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

CSK vs GT

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஒரே அணி என்கிற சாதனையையும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த முதலாவது குவாலிபயர் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிகள் நுழைந்துள்ள சென்னை அணியானது நிச்சயம் கோப்பையுடனே இந்த தொடரை நிறைவு செய்யும் என்பது ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே : மீண்டும் இங்கு வந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வந்து விளையாடுவீர்களா? என்ற கேள்வியை தோனியிடம் எழுப்பினார்.

Dhoni

அப்போது அதற்கு தோனி நேரடியாக அளித்த பதிலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் போட்டி முடிந்து தனது ஓய்வு குறித்து பேசிய தோனி கூறுகையில் : ஓய்வு குறித்து தற்போது எனக்கு எதுவும் தெரியாது. அடுத்து சீசனுக்கு இன்னும் 8-9 மாதங்கள் இருக்கிறது.

- Advertisement -

எனவே அதுபற்றி இப்போது யோசிக்க போவதில்லை எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். சிஎஸ்கே அணிக்காக போட்டியிலேயோ அல்லது வெளியிலயோ இங்கே உட்கார்ந்து சென்னை அணிக்காக கூடவே இருப்பேன்.

இதையும் படிங்க : நாம எடுக்கும் முடிவு பிசிசிஐ கன்னத்தில் அறைஞ்ச மாதிரி இருக்கனும் – பாக் வாரியத்துக்கு ஷாகித் அஃப்ரிடி கோரிக்கை

ஓய்வு குறித்து யோசித்து தற்போதே இந்த தலைவலியை நான் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் சிஎஸ்கே அணிக்காக நான் எப்போதும் இருப்பேன் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியின் ரசிகர்கள் அனைவரும் தோனி கோப்பையுடன் இந்த சீசனில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்பும் வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் தோனி இன்னும் குறைந்தது 5 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement