நாம எடுக்கும் முடிவு பிசிசிஐ கன்னத்தில் அறைஞ்ச மாதிரி இருக்கனும் – பாக் வாரியத்துக்கு ஷாகித் அஃப்ரிடி கோரிக்கை

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சனை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை மட்டும் வேண்டா வெறுப்பாக விளையாடி வருகின்றன. இருப்பினும் அந்த வரிசையில் இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Jay Shah IND vs PAk

- Advertisement -

அடுத்த நாளே எங்கள் நாட்டுக்கு ஆசிய கோப்பையில் பங்கேற்க நீங்கள் வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்கள் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பையில் பங்கேற்க நாங்களும் வர மாட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. அப்போது முதல் கடந்த 6 மாதங்களாக இந்த விவகாரம் பற்றி இரு நாட்டுக்கும் இடையே காரசாரமான விவாதங்களும் மோதலும் நடைபெற்று வருகின்றன. அதில் 2021 டி20 உலக கோப்பையில் தோற்றது போல் பாகிஸ்தான் மக்களுக்கு முன்னால் தோல்வியை சந்தித்தால் அதை ஜீரணிக்க முடியாது என்ற காரணத்தால் பாதுகாப்பை குறை சொல்லி இந்தியா மலுப்புவதாக முகமது நசீர் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

அப்ரிடி கோரிக்கை:
ஆனால் சமீபத்திய பிஎஸ்எல் தொடரின் போது பாகிஸ்தான் வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் வகையிலான நிகழ்வுகள் அரங்கேறியதால் இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இருப்பினும் அப்படி பாகிஸ்தான் என்ன தான் பேசினாலும் ஐசிசி மற்றும் ஆசிய கவுன்சிலுக்கு அதிக வருமானத்தை கொடுக்கும் நாடாகவும் ஆசிய கவுன்சிலுக்கே தலைவராக இருக்கும் இந்தியாவின் ஜெய் ஷா எடுக்கும் முடிவே இந்த விவகாரத்தில் இறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jay Shah Najam Sethi

அது போக இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை புறக்கணித்தால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு (ஷேர்) பணமும் பாகிஸ்தானுக்கு கிடைக்காது. அதனால் தற்போதுள்ள பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உணர்ச்சிபூர்வமான முடிவு எடுக்கக் கூடாது என கடந்த சில மாதங்களுக்கு முன்பே முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய தேர்வுக்குழு தலைவர் சாகித் அப்ரிடி தெரிவித்திருந்தார். ஆனாலும் ஆசிய கோப்பையில் பங்கேற்க வராமல் போனால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் சேதி தொடர்ந்து கூறி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் என்று அடம் பிடிக்காமல் இந்தியாவுக்கு சென்று கோப்பையை வென்று வாருங்கள் என்று பாகிஸ்தான் அணியினருக்கு அறிவுரை வழங்கி அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வாரியத்தை சாகித் அப்ரிடி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக தங்களை புறக்கணிக்க நினைக்கும் இந்தியாவுக்கு அவர்களது சொந்த மண்ணிலேயே கோப்பையை வென்று கன்னத்தில் அறைந்தது போல் செயலால் பதிலடி கொடுக்கும் முடிவை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பிரபல தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

Babar Azam Mohammad Rizwan Shahid Afridi

“இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் என்று பாகிஸ்தான் ஏன் தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் தற்போதைய பரபரப்பான நிலைமையை எளிமையாக்கி சர்வதேச அளவில் நடைபெறும் ஒரு தொடரின் அருமையை புரிந்து கொண்டு நேர்முகத் தன்மையுடன் அங்கு சென்று விளையாட வேண்டும். குறிப்பாக மொத்த நாடும் உங்களுக்கு பின்னால் இருக்கிறது என்பதை உணர்ந்து இந்திய மண்ணில் கோப்பையை வென்று வாருங்கள் என்று பாகிஸ்தான் அணியினரிடம் நாம் சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க:IPL2023 : பாதியில் நின்ற போட்டி, சாதூரியத்தால் ரூல்ஸ், அம்பயர்களை சிஎஸ்கே’வுக்கு சாதகமாக்கிய தல தோனி – நடந்தது என்ன?

“அப்படி இந்திய மண்ணில் நாம் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றால் அது நமக்கு பெரிய வெற்றியாக அமையும். அத்துடன் அது பிசிசிஐ முகத்தில் வலுவாக அறைந்ததற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார். இதன் காரணமாக இந்தியாவுக்கு வந்து உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடுவதற்கான சூழல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement