வீடியோ : நடராஜன் செல்லக் குழந்தையுடன் கொஞ்சி மகிழ்ந்த தல தோனி – தமிழக ரசிகர்கள் நெகிழ்ச்சி

Natarajan MS Dhoni
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் சென்னையின் தரமான பந்து வீச்சில் அதிரடியாக செயல்பட முடியாமல் 20 ஓவர்களில் 134/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 (26) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 135 ரன்களை துரத்திய சென்னைக்கு ஆரம்பத்திலேயே 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த ருதுராஜ் கைக்வாட் 35 (30) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ரகானே 9, ராயுடு 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாகவும் நங்கூரமாகவும் செயல்பட்ட டேவோன் கான்வே 12 பவுண்டரி 1 சிக்சருடன் 77* (57) ரன்கள் குவித்து 18.4 ஓவரிலேயே சென்னை வெற்றி பெற உதவியினார். மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட ஹைதெராபாத்துக்கு பந்து வீச்சில் மயங் மார்கண்டே 2 விக்கெட்டுகளை எடுத்துப் போராடியும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

நடராஜன் குழந்தையுடன் தோனி:
அப்படி சிறப்பாக நடைபெற்று முடிந்த அந்த போட்டியின் முடிவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறைய இளம் வீரர்கள் இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று ஐபிஎல் தொடரிலும் 4 சாம்பியன் பட்டங்களை வென்று மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனியிடம் சுற்றி நின்று ஆலோசனை கேட்டனர். அவர்களுக்கு ஆலோசனை கொடுத்த அவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் மற்றொரு நட்சத்திர தமிழக வீரர் நடராஜனையும் நேரில் சந்தித்தார்.

குறிப்பாக சென்னையில் நடைபெற்ற இப்போட்டியை நடராஜனின் மனைவி மற்றும் பெண் குழந்தையும் நேரில் கண்டு களித்தனர். அந்த நிலையில் போட்டியின் முடிவில் நடராஜனின் கைகளில் ராணியைப் போல் அமர்ந்திருந்த அவருடைய செல்ல குழந்தையிடம் தம்முடைய கைகளில் தட்டுமாறு தோனி கொஞ்சி பேசி மகிழ்ந்தார். இருப்பினும் பொதுவாகவே சில சின்ன குழந்தைகள் வெளிநபர்களிடம் அவ்வளவு எளிதில் பழகாது என்பது போலவே தோனியிடமும் அவரது குழந்தை கை கொடுக்காமல் செல்லமாக அடம் பிடித்தது.

- Advertisement -

அதை விட “அப்போது உங்கள் வீட்டில் தம்பி இருக்கிறாரா” என்று நடராஜன் குழந்தை செல்லமாக கேட்டது. அதற்கு “இல்லை எங்கள் வீட்டில் உங்களைப் போல ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்கிறார்” என்று ஜிவாவை குறிப்பிட்டு தோனி பாசத்துடன் பதிலளித்தார். அப்படியே சிரித்த முகத்துடன் ஜாலியாக பேசிய தோனி இறுதியில் நடராஜன் மற்றும் அவருடைய குழந்தை, மனைவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்படி தமிழக வீரர் நடராஜன் குழந்தையிடம் தோனி செல்லமாக பேசி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாதாக அந்த போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ள சென்னை 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தாவை தன்னுடைய அடுத்த போட்டியில் சென்னை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இதையும் படிங்க: IPL 2023 : குயின்டன் டீ காக் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த தல தோனி, ஐபிஎல் தொடரிலும் வரலாற்று சாதனை

மறுபுறம் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ள ஹைதராபாத் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறுகிறது. அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள அந்த அணி அடுத்ததாக ஏப்ரல் 24 ஆம் தேதி தன்னுடைய அடுத்த போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது.

Advertisement