வீடியோ : படையப்பா எண்ட்ரி, கண்ணான கண்ணே பாசம், சஹாரை வம்பிழுத்த சேட்டை – ஒரே போட்டியில் தல தோனியின் 3 முகம்

MS Dhoni 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை தங்களது 7வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது. அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் போராடி 167/8 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக சிவம் துபே 25 (12) ருதுராஜ் கைக்வாட் 24 (18) அம்பத்தி ராயுடு 23 (17) ரவீந்திர ஜடேஜா 21 (16) என முக்கிய வீரர்கள் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் தேவையான ரன்களை எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 168 ரன்களை துரத்திய டெல்லிக்கு டேவிட் வார்னர் 0, பில் சால்ட் 17 (11), மிட்சேல் மார்ஷ் 5 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மிடில் ஆர்டரில் மனிஷ் பாண்டே 27 (29) ரிலீ ரோசவ் 35 (37) என முக்கிய வீரர்கள் மெதுவாக விளையாடி ஆட்டமிழந்து அழுத்தத்தை உண்டாக்கினர்.

- Advertisement -

தோனியின் 3 முகம்:
அதனால் கடைசியில் அக்சர் படேல் 21 (12) ரன்களும் லலித் யாதவ் 12 (5) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 140/8 ரன்களுக்கு டெல்லியை கட்டுப்படுத்தி வென்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக மதிசா பதிரான 3 விக்கெட்டுகள் எடுத்தார். அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டி துவங்குவதற்கு முன்பாக மற்றொரு வீரருடன் தீபக் சஹர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தோனி என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென கோபத்துடன் அவரது கன்னத்தில் அடிப்பது போல் சென்று கையை இழுத்துக் கொண்டார்.

அதனால் திடீரென பயந்த சஹர் என்ன தவறு செய்தேன் இப்படி பண்ணிட்டு போறாரு என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார். இருப்பினும் 14 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு காயத்தால் வெளியேறி கடந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு பறிபோக முக்கிய காரணமாக இருந்த சஹர் இந்த வருடமும் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. அதனாலயே இனிமேலாவது அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுமாறு அவருக்கு உணர்த்தும் வகையில் தோனி அப்படி ஜாலியாக பள்ளி நண்பர்களுக்கிடையே செய்யும் சேட்டையை போல நடந்து கொண்டதாக ரசிகர்கள் பேசுகின்றனர்.

- Advertisement -

அதை விட ஏற்கனவே தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்கள் நேற்றைய போட்டியில் ஸ்மார்ட் வாட்ச்சில் 100 டெசிபல் எச்சரிக்கை சத்தம் பதிவாகும் அளவுக்கு அவர் பேட்டிங் களமிறங்கிய போது ஆரவாரம் செய்தனர். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் தீம் மியூசிக்கை மைதானத்தின் டிஜே ஒளிபரப்பினார். அந்த மாஸ் இசையுடன் 126/6 என தடுமாறிய சென்னை 150 ரன்களை தொடுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது களமிறங்கிய தோனி 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 20 (9) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தன்னை மிகச் சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபித்தார்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே 41 வயதானாலும் ஃபினிஷிங் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் களமிறங்கி அசத்திய தோனிக்கு படையப்பா மியூசிக் மிகவும் கச்சிதமாக பொருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி அதிரடியாக விளையாடிய தோனியின் ஆட்டத்தை அவருடைய மனைவி சாக்சி மற்றும் மகள் ஜீவா ஆகியோர் சேப்பாக்கம் மைதானத்தில் நேராக பார்த்து உற்சாகப்படுத்தி ஆதரவு கொடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: IPL 2023 : அவர்கிட்ட ஆண்ட்ரூ சைமன்ஸ் அசால்ட்டாக அடிக்கும் பவர் இருக்கு – இந்திய வீரரை வேற லெவலில் பாராட்டிய பிரட் லீ

அதை விட போட்டியின் முடிவில் சிறப்பாக செயல்பட்ட தனது தந்தையை பாசத்துடன் ஜீவா ஓடி சென்று கட்டிப்பிடித்ததையும் அவர் தனது மகளை அணைத்துக் கொண்டதையும் பார்க்கும் போது சினிமாவின் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் தான் நிறைய ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரே போட்டியில் சேட்டை, மாஸ், பாசம் என்ற தோனியின் 3 முகம் வெளிப்பட்டது அவரை மேலும் ஸ்பெசலாக மாற்றுகிறது என்றே சொல்லலாம்.

Advertisement