IPL 2023 : அவர்கிட்ட ஆண்ட்ரூ சைமன்ஸ் அசால்ட்டாக அடிக்கும் பவர் இருக்கு – இந்திய வீரரை வேற லெவலில் பாராட்டிய பிரட் லீ

Lee
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் முழுமையான திறமையை வெளிப்படுத்தி தங்களது அணிகளுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்தியாவுக்காக விளையாடும் முனைப்புடன் அசத்தி வரும் நிலைய இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜித்தேஷ் சர்மா செயல்பட்டு வருகிறார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் சமீப காலங்களில் உள்ளூர் அளவில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த வருடம் முதல் முறையாக பஞ்சாப் அணிக்கு வெறும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். அந்த முதல் வாய்ப்பில் 10 இன்னிங்ஸில் 234 ரன்களை 163.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அனைவரது கவனத்தை ஈர்த்த அவர் மீண்டும் தக்க வைக்கப்பட்டார்.

PBKS vs MI Jofra Archer Jitesh Sharma

- Advertisement -

அந்த நிலையில் இந்த வருடமும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் அவர் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் லோயர் மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக 260 ரன்களை 160.49 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து முடிந்தளவுக்கு பஞ்சாப்பின் பேட்டிங்கில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக மெதுவாக துவங்காமல் அரை சதம் போன்ற சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடும் அவருடைய ஸ்டைல் அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

சைமன்ஸ் மாதிரி:
அதனால் காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு பதிலான மாற்று வீரராக இந்திய அணியில் விளையாடும் அளவுக்கு ஜிதேஷ் சர்மாவிடம் திறமை இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டினார். அதே போல் ரிஷப் பண்ட் இல்லாத சமயத்தில் இந்தியாவுக்காக எப்போது வேண்டுமானாலும் ஜிதேஷ் சர்மா தேர்வாக வாய்ப்புள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.

Andrew Symonds Deccan Chargers

அத்துடன் நான் தேர்வுக் குழு தலைவராக இருந்தால் 2022 டி20 உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் தர்மாவை தேர்வு செய்தேன் என்று கடந்த வருடமே முதல் ஆளாக பாராட்டியிருந்த சேவாக் இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்க்க முடியும் என்று சமீபத்தில் பாராட்டியிருந்தார். அந்த வரிசையில் 2007 உலகக் கோப்பை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ சைமன்ஸ் போல பந்தை பவர் கொடுத்து கட்டுப்பாட்டுடன் அடிப்பதாக ஜிதேஷ் சர்மாவை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “பந்தை காட்டுதனமாக அடிக்காமலேயே நல்ல பவருடன் அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. இந்த விளையாட்டில் களமிறங்கியதும் பந்தை பவுண்டரிக்கு வெளியே அதிரடியாக அடிக்க முயற்சிக்கும் நோக்கத்தில் வடிவத்தை இழக்கும் நிறைய வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ஜித்தேஷ் சர்மா அதை செய்வதில்லை. அவர் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு ஆண்ட்ரூ சைமன்ஸை நினைவு படுத்துகிறது. ஏனெனில் அவர் களமிறங்கியதும் பந்தை சூப்பர் பவருடன் மட்டுமில்லாமல் மிகவும் கண்ட்ரோலாக அடிப்பார். அதுதான் அவருடைய பேட்டிங்கில் இருக்கும் மிகப்பெரிய சொத்தாகும்” என்று கூறினார்.

Lee

அப்படி அதிரடியாக விளையாடும் திறமையால் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வரும் ஜிதேஷ் சர்மாவுக்கு ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு அடுத்தபடியாக நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் காயத்தால் விலகியிருக்கும் நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்கும் திட்டத்தை கையில் வைத்திருக்கும் தேர்வு குழு அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க:IPL 2023 : இனிமேல் எதோ குருட்டு அதிர்ஷ்டத்துல அடிச்சுட்டாருன்னு அவர சொல்ல முடியாது – இளம் இந்திய வீரரை பாராட்டிய சைமன் டௌல்

அதை தொடர்ந்து அவர் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் தவிக்கிறது. எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெறும் முனைப்புடன் பஞ்சாப் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement