IPL 2023 : இனிமேல் எதோ குருட்டு அதிர்ஷ்டத்துல அடிச்சுட்டாருன்னு அவர சொல்ல முடியாது – இளம் இந்திய வீரரை பாராட்டிய சைமன் டௌல்

Simon Doull
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்தி தங்களது அணியை வெற்றி பெற வைத்து இந்தியாவுக்காக சர்வதேச அளவில் விளையாடும் எண்ணத்துடன் அசத்தி வரும் நிறைய இளம் வீரர்களுக்கு மத்தியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரிங்கு சிங் அபாரமாக செயல்பட்டு வருகிறார். சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் விளையாடத் துவங்கி கடந்த சில வருடங்களாக கொல்கத்தா அணியில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் கடந்த வருடம் லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்து தோல்வியை சந்தித்தார்.

Rinku SIngh

- Advertisement -

ஆனால் இந்த சீசனில் ஆரம்பம் முதலே மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது யாருமே எதிர்பாராத வகையில் 5 அடுத்தடுத்த சிக்ஸர்களை வரலாறு காணாத சரித்திர வெற்றி பெற்று கொடுத்து உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றார். அப்போதிலிருந்தே நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் மே 8ஆம் தேதி பஞ்சாப்புக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரியை பறக்க விட்டு 21* (10) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தார்.

டௌல் பாராட்டு:
அந்த வகையில் இந்த வருடம் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 337 ரன்களை 151.12 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து பாராட்டும் அளவுக்கு அசத்தி வரும் அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 2 போட்டிகளில் கடைசி பந்தில் வெற்றி பெறும் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார். இருப்பினும் கூட அந்த 2 போட்டிகளிலுமே கடைசி நேரங்களில் எதிரணி பவுலர்கள் ஃபுல் டாஸ் பந்துகளை வீசியதால் எளிதாக அடித்து விட்டதாகவும் ஓரிரு போட்டிகளில் மட்டுமே அடிப்பார் என்றும் சில கருத்துக்கள் காணப்படுகின்றன.

ஆனால் என்ன தான் ஃபுல் டாஸ் பந்தாக இருந்தாலும் திறமை இல்லாமல் அவ்வளவு பெரிய அழுத்தமான கடைசி ஓவரில் எட்ஜ் கொடுக்காமல் சிறப்பான பவுண்டரிகளை முடியாது என்றே சொல்லலாம். இந்நிலையில் இனிமேலும் ரிங்கு சிங் ஓரிரு போட்டிகளில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் அடித்தார் என்று சொல்ல முடியாது என முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் தற்போது இதை தொடர்ந்து செய்யத் துவங்கியுள்ளார். அதாவது இனிமேலும் நீங்கள் ஒரு போட்டியில் மட்டும் அதிர்ஷ்டத்துடன் விளையாடினார் என்று அவரை சொல்ல முடியாது. ஏனெனில் இந்த சீசனில் அவர் 300க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். அதை தற்போது அவர் தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக இந்த சீசனில் அவர் சேசிங் செய்யும் போது 4வது முறையாக அவுட்டாகாமல் பேட்டிங் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். எனவே அவர் சிறப்பாக விளையாட முயற்சிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது”

Simon Doull

“கடந்த வருடம் ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போது இவரால் ஏதோ செய்ய முடியும் என்று நாம் பேசினோம். அவர் உள்ளூர் அளவில் மிகவும் சாதுரியமாக கடினமாக செயல்படக் கூடியவராக இருக்கிறார். ஏனெனில் அவர் வாழ்வில் கடினமான தருணங்களை பார்த்து வந்துள்ளார். இப்போதெல்லாம் அவர் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்”

இதையும் படிங்க:2023 உ.கோ : சென்னையில் இந்தியாவின் துவக்க போட்டி, பாகிஸ்தானுடன் மோதல் எப்போது? தேதி, மைதானங்கள் இதோ

“அந்த வகையில் அவர் மிகவும் சாதுரியமான பினிஷராக உருவெடுத்து வருகிறார். மேலும் அனைத்து நேரங்களிலும் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் அவர் கற்று வருகிறார். இது வளர்ந்து வரும் ஒரு பையனுக்கு அடையாளமாகும். இந்த விளையாட்டில் தொடர்ந்து அசத்துவதற்கான திறமையும் புத்திசாலித்தனமும் அவரிடம் உள்ளது” என்று கூறினார்.

Advertisement