வீடியோ : கால் படக்கூடாது அவ்ளோ தானே, வரலாற்றின் சாதூர்ய கேட்ச் பிடித்த வீரர் – கண்ணை துடைத்து விட்டு பார்க்கும் ரசிகர்கள்

BBL Catch
Advertisement

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக்பேஷ் பிரீமியர் லீக் டி20 தொடர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்தொடரில் 2023 புத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் பிரிஸ்பென் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. உலக புகழ் பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 224/5 ரன்கள் குவித்து மிரட்டியது. அந்த அணிக்கு தொடக்க வீரர் கோலின் முன்றோ 10 ரன்னில் அவுட்டானாலும் அடுத்து வந்த ஜோஷ் பிரவுன் அதிரடியாக 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 62 (23) ரன்களும் நாதன் மெக்ஸ்வீன்வி 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 84 (51) ரன்களும் குவித்தனர்.

அதை தொடர்ந்து 225 ரன்களை துரத்திய சிட்னி அதிரடியாக ரன்களை சேர்த்தாலும் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தது. குறிப்பாக ஜோஸ் பிலிப் 27, ஜேம்ஸ் வின்ஸ் 41, டேனியல் ஹுக்ஸ் 17, ஹென்றிக்ஸ் 11, ஜோர்டான் சில்க் 41, டேனியல் க்ரிஸ்டன் 11 என முக்கிய வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்தாலும் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 209 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

- Advertisement -

சாதூரிய கேட்ச்:
முன்னதாக அப்போட்டியில் மிடில் ஓவர்களில் களமிறங்கி மிரட்டலாக பேட்டிங் செய்த ஜோஸ் சில்க் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக ரன்களை சேர்த்து சிட்னி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வர போராடினார். குறிப்பாக 19வது ஓவரின் முதல் பந்தில் அதிரடி காட்டிய அவர் டீப் திசையில் நோக்கி சிக்சரை பறக்க விட்டார். அதை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் நாசீர் முடிந்தளவுக்கு தாவி பந்தை பிடித்தார். அதே சமயம் பேலன்ஸ் செய்ய முடியாமல் பவுண்டரி எல்லையை கடந்த அவர் வழக்கம் போல பந்தை மேலே தூக்கி போட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்றார்.

ஆச்சரியப்படும் வகையில் அவர் வீசிய கோணத்தில் மைதானத்திற்குள் செல்லாத பந்து தொடர்ந்து அவரை நோக்கியே பவுண்டரி எல்லைக்குள் காற்றில் இருந்தது. அப்போது பவுண்டரிக்குள் சென்று 3 – 4 அடிகள் மெதுவாக ஓடிய அவர் தன்னை நோக்கி வந்த பந்து கச்சிதமாக பிடிக்க முயற்சிதார். ஆனால் பவுண்டரிக்குள் இருந்த அவர் தனது கையால் கீழே வந்து கொண்டிருந்த பந்தை பிடிக்க சென்ற போது ஒரு காலில் தாவி இன்னொரு காலையும் தரையிலிருந்து எடுத்த பின்னர் பந்தை பிடித்து அடுத்த அரை நொடிக்குள் மீண்டும் மைதானத்திற்குள் இருக்கும் வகையில் காற்றில் தூக்கி போட்டார்.

- Advertisement -

அதாவது பந்தை பிடிக்கும்போது அவரது இரு கால்களும் அரை நொடிப் பொழுது காற்றில் இருந்தது. அதனால் மீண்டும் களத்திற்குள் வந்து பந்தை பிடித்த அவர் கேட்ச் பிடித்து விட்டதாக நடுவரிடம் வாதாடினார். அதை தொடர்ந்து அதை சோதித்த 3வது நடுவர் அழைத்த நிலையில் ஒன்றுக்கு 2 முறை அவரது இந்த சாதுரியமான வேலையை சோதித்து பார்த்தார். இறுதியில் பவுண்டரிக்குள் சென்றாலும் பந்தை அவர் கையில் பிடிக்கும் போது 2 கால்களும் தரையில் இல்லாத காரணத்தால் அது அவுட் என்று நடுவர் அறிவித்தார்.

அதனால் வர்ணையாளர்கள் மிகவும் ஆச்சரியமடைந்து வியப்பில் ஆழ்ந்தது போலவே ரசிகர்களும் வாய் மேல் கை வைத்து நின்றார்கள். மேலும் இது நான் பார்த்ததிலேயே மிகவும் சர்ச்சையான அவுட் என்று வர்ணனையாளர்கள் செய்த ஆடம் கில்கிறிஸ்ட், சைமன் டௌல் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதே சமயம் உடனடியாக அது பற்றிய எம்சிசி விதிமுறை புத்தகத்தை திருப்பி பார்த்த அவர்கள் அது விதிமுறைக்கு உட்பட்டு தான் கொடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டு அமைதியானார்கள்.

இதையும் படிங்கஆஸ்திரேலிய தொடர் மட்டுமல்ல முக்கியமான அந்த தொடரையும் ரிஷப் பண்ட் தவறவிடுவார் – அடப்பாவமே

அவர்களை அமைதியாக்கிய எம்சிசி விதிமுறை பின்வருமாறு. “மைதானத்துடன் தொடர்பில்லாத ஒரு ஃபீல்டர், பந்து வீச்சாளரால் பந்து வீசப்பட்ட பிறகு, அவரது முதல் தொடர்பு மைதானத்துடனான அவரது இறுதித் தொடர்பு, முழுவதுமாக இல்லாதிருந்தால், எல்லைக்கு அப்பால் தரையிறக்கப்பட்டதாகக் கருதப்படுவார்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement