ஆஸ்திரேலிய தொடர் மட்டுமல்ல முக்கியமான அந்த தொடரையும் ரிஷப் பண்ட் தவறவிடுவார் – அடப்பாவமே

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் இவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அவர் விரைவில் நலம்பெற்று திரும்ப வேண்டும் என்று பலரும் தங்களது பிராத்தனைகளை முன்வைத்து வருகின்றனர்.

Rishabh-Pant

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு ஏற்பட்டுள்ள காயங்களில் இருந்து அவர் முழுமையாக மீண்டு வர குறைந்தது 6 மாதங்கள் வரை தேவைப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவருக்கான மாற்றுவீரரை தேர்வு செய்யும் பணியையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சற்று தடுமாற்றமான பார்மை அவர் வைத்திருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர் அணியின் முதல் தேர்வாக இருக்கிறார். அந்த அளவிற்கு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.’

pant 1

இந்நிலையில் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மட்டுமின்றி இந்தியாவில் வரும் ஏப்ரல், மீ மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 16-ஆவது சீசனையும் முழுமையாக தவறவிட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ரிஷப் பண்ட்டின் காயம் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பவே 6 மாதங்கள் வரை ஆகும் என்பதனால் அவர் ஐ.பி.எல் தொடரிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : யோ – யோ டெஸ்டில் ஜெயிச்சால் தான் இனி இந்திய அணியில் இடம் – யோ – யோ டெஸ்ட் என்றால் என்ன தெரியுமா?

அதோடு இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலககோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அவர் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழலில் இருக்கிறார். எனவே அவர் 50 ஓவர் உலககோப்பை தொடரில் இடம்பெறுவது கூட கடினமான இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement