யோ – யோ டெஸ்டில் ஜெயிச்சால் தான் இனி இந்திய அணியில் இடம் – யோ – யோ டெஸ்ட் என்றால் என்ன தெரியுமா?

Practice
- Advertisement -

இந்திய அணியில் கும்ப்ளே பயிற்சியாளர்கவும், விராட் கோலி கேப்டனாகவும் இருந்த சமயத்தில் வீரர்களுக்கு யோ – யோ டெஸ்ட் நடைமுறைக்கு வந்தது. யோ – யோ டெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த வீரர்களின் உடற்தகுதி பரிசோதனைக்கு பின்னரே ஒவ்வொரு தொடரிலும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு நடைபெறும். ஒருவேளை இந்த யோ – யோ டெஸ்டில் தோல்வியை சந்தித்தால் எந்தவொரு வீரராக இருந்தாலும் இந்திய அணியில் இடம்கிடைக்காது.

IND

- Advertisement -

இந்த யோ -யோ டெஸ்டில் தோல்வியை சந்தித்து இந்திய அணியில் சில நட்சத்திர வீரர்களும் இடம்பிடிக்க தவறிய கதையும் உண்டு. இந்நிலையில் எதிர்வரும் இந்திய அணிக்கான தேர்வில் யோ – யோ டெஸ்ட் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாக இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ மீட்டிங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ சார்பில் நடைபெற்ற மீட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட்https://crictamil.in/category/cricket/ அகாடெமியின் தலைவர் வி.வி.எஸ் லக்ஷ்மனன் உட்பட 4 முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த மீட்டிங்கின்போது பல்வேறு முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

BCCI

அந்த மீட்டிங்கின் முடிவில் இந்திய அணியில் இடம்பிடிக்க இனி வீரர்கள் அதிக அளவில் ரஞ்சி டிராபி, துலிப் டிராபி, சையத் முஷ்டாக் அலி போன்ற தொடர்களில் விளையாடி இருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கட்டாயம் யோ – யோ தேர்வு தேர்ச்சி பெறவேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. யோ – யோ டெஸ்ட் என்றால் என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அதன்படி 20 மீட்டர் கொண்ட நீளத்தை தேர்வு செய்து அதன் ஆரம்ப இடத்தினை துவக்க புள்ளியாகவும், இறுதி இடத்தினை முடிவு புள்ளியாககவும் குறித்து கொள்வார்கள். மேலும் இந்த சோதனையில் இடம்பெறும் வீரர்களுக்கு 40 வினாடிகள் வழங்கப்பட்டு அந்த 20 மீட்டர் இடைவெளியை எவ்வளவு நேரத்தில் தொட்டு திரும்புகிறார்கள் என்று கணக்கிடப்படும். அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே அவர்கள் தேர்ச்சி பெறுவார்களா? மாட்டார்களா? என்பது தெரியும்.

இதையும் படிங்க : 2023 புத்தாண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை இந்திய அணி களமிறங்கும் முதன்மை அட்டவணை இதோ

இந்த விதிமுறை சற்று கடினமாக இருந்தாலும் முழுஉடற்தகுதியுடன் இருக்கும் வீரர்களே அணிக்கு தேவை என்பதனால் இந்த முடிவு மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனி இந்திய அணியில் இடம்பெற விரும்பும் வீரர்கள் கட்டாயம் இந்த தேர்வில் தேர்ச்சி அடையவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement