1, 4, 5, 4, 4, 2, 6.. ஒரே ஓவரில் 26 ரன்கள்.. குட்டி மலிங்கா பதிரனாவை கருணையின்றி நொறுக்கிய மார்க்ரம்

pathirana
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தலைநகர் டெல்லியில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற 4வது லீக் போட்டியில் இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா தங்களுடைய பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் இலங்கை பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி 428/5 ரன்கள் சேர்த்தது.

அதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்த தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 100, வேன் டெர் டுஷன் 108, ஐடன் மார்க்ரம் 106 என 3 வீரர்கள் சதமடித்து மிரட்டினார்கள். அந்தளவுக்கு சுமாராக டாஸ் வென்று முதலில் சுமாராக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பரிதாப பதிரனா:
அதை தொடர்ந்து 429 பெரிய இலக்கை துரத்திய இலங்கை முடிந்தளவுக்கு போராடியும் 44.5 ஓவரில் 326 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக நிஷாங்கா 0, பெரேரா 7, டீ சில்வா 11 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்ததால் குஷால் மெண்டிஸ் 76, அசலங்கா 79, கேப்டன் சனாக்கா 68 ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா சார்பில் ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக இந்த போட்டியில் பெரும்பாலான இலங்கை பவுலர்கள் 8க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கும் அளவுக்கு தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் கருணையின்றி அடித்து நொறுக்கினார்கள். அதிலும் குறிப்பாக ஜாம்பவான் மலிங்கா போல பந்து வீசும் ஆக்சனை கொண்டுள்ள மாதிசா பதிரனா 43வது ஓவரின் முதல் பந்தில் கிளாஸினுக்கு எதிராக சிங்கிள் மட்டும் கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் 2வது பந்தை எதிர்கொண்ட மார்க்கம் பவுண்டரி அடித்ததால் தடுமாறிய அவர் 3வது பந்தில் கீப்பரால் பிடிக்க முடியாத அளவுக்கு ஒயிட் போட்டு பவுண்டரி கொடுத்தார். அந்த நிலைமையில் மீண்டும் வீசப்பட்ட 3வது பந்தில் பவுண்டரி அடித்த மார்கரம் 4வது பந்திலும் பவுண்டரி அடித்து 5வது பந்தில் டபுள் எடுத்தார். அதனால் ரொம்பவே பதற்றமடைந்த பதிரனா வீசிய கடைசி பந்தில் மார்க்ரம் சிக்ஸரை பறக்க விட்டார்.

அந்த வகையில் 1, 4, 5, 4, 4, 2, 6 என ஒரே ஓவரில் 26 ரன்களை வாரி வழங்கிய பதிரனா மொத்தமாக 10 ஓவரில் 1 விக்கெட்டை போதிலும் 95 ரன்கள் கொடுத்தார். ஐபிஎல் 2023 தொடரில் சென்னை கோப்பை வெல்வதற்கு டெத் ஓவரில் சிறப்பாக செயல்பட்டு குட்டி மலிங்கா என்று ரசிகர்களிடம் பாராட்டுகளை வாங்கிய அவர் மீது இப்போட்டியில் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் இன்னும் இளம் வீரராகவே இருக்கும் அவர் இப்போட்டியில் ரன்களை வாரி வழங்கி சுமாராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement