வெற்றி உறுதியான மிதப்பில் அஷ்வினை அலைக்கழித்த லபுஸ்ஷேன் – கடுப்பான அம்பயர், ரசிகர்கள் அதிருப்தி

Labuschange Ashwin
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்ட ஆஸ்திரேலியா கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக உலகின் நம்பர் ஒன் அணி என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படாமல் பிட்ச் பற்றி தேவையின்றி விமர்சித்ததை செயலில் காட்டாமல் படு தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா கிண்டல்களுக்கு உள்ளானது. அந்த நிலைமையில் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் கச்சிதமாக பந்து வீசிய ஆஸ்திரேலியா இந்தியாவை வெறும் 109 ரன்களுக்கு சுருட்டியது.

அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 186/4 என்ற வலுவான நிலையில் இருந்தபோது அனலாக பந்து வீசிய இந்தியா 197 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் சொந்த மண்ணில் தோல்வியை தவிர்க்க பொறுப்புடன் செயல்பட வேண்டிய இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி கைவிட்டார்கள்.

- Advertisement -

வெற்றி மமதை:
அதிகபட்சமாக புஜாரா 59 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 8 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 75 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 49* ரன்களும் மார்னஸ் லபுஸ்ஷேன் 28* ரன்களும் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொண்ட ஆஸ்திரேலியா ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.

மறுபுறம் அடுத்தடுத்த வெற்றிகளால் ஆஸ்திரேலியா என்ன செய்து விடப் போகிறது என்ற அஜாக்கிரதையுடன் செயல்பட்ட இந்தியா மோசமான தோல்வியை சந்தித்து கடைசி போட்டியில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 3வது நாளில் 75 ரன்களை ஆஸ்திரேலியா துரத்தும் போது உஸ்மான் கவாஜாவை டக் அவுட்டாக்கிய அஷ்வின் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். அந்த நிலையில் அடுத்த வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேனை அவுட்டாக்க புதிய திட்டத்தை வகுத்த அஸ்வின் ஒரு ஓவரில் 4 பந்துகளை வீசிய பின் 5வது பந்தில் தன்னுடைய ஓட்டத்தில் 2 நடையை குறைக்க முடிவெடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக ஸ்டம்ப்களுக்கு அருகிலிருந்தே ஓடி வந்து பந்து வீச அவர் துவங்கிய போது கடைசி நேரத்தில் லபுஸ்ஷேன் விலகிச் சென்றார். அதைத்தொடர்ந்து மீண்டும் பந்து வீசுவதற்காக அஷ்வின் தயாரான போது வேண்டுமென்றே வாயில் ஸ்விங்கமை மென்றுக்கொண்டு நேரத்தை கடத்தும் வகையில் லபுஸ்ஷேன் நடந்து கொண்டார். அதனால் “என்னையா இவ்வளவு தாமதம்” என்ற அளவில் அஸ்வின் ரியாக்சன் கொடுத்தார். ஆனால் அப்போது பந்தை எதிர்கொள்ள தயாரான லபுஸ்ஷேன் மீண்டும் அங்கிருந்து விலகிச் சென்றார். அதனால் அஷ்வின் அதிருப்தியடைந்ததை விட அதிகமாக கடுப்பான அம்பயர் ஜோயல் வில்சன் நேராக அவரின் அருகே சென்று “ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறீர்கள்” என்ற வகையில் கேள்வி எழுப்பினார்.

இடையே கேப்டன் ரோகித் சர்மாவும் அவரது அருகே சென்று என்னவென்று கேட்டார். அதற்கு அஸ்வின் தன்னுடைய பவுலிங் ஆக்சனை மாற்றுவதால் தாமும் தம்முடைய பேட்டிங்கில் சில மாற்றத்தை செய்வதற்கு அந்த தாமதத்தை செய்தென் என்ற வகையில் லபுஸ்ஷேன் நடுவரிடம் பதிலளித்தார். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளாத நடுவர் பேசாமல் போய் பந்தை எதிர்கொள்ளுங்கள் என்று சொன்னதை தொடர்ந்து போட்டி நடைபெற்றது.

இதையும் படிங்க: IND vs AUS : இந்திய அணிக்கெதிரான இந்த அற்புதமான வெற்றிக்கு காரணம் இதுதான் – ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி

பொதுவாக ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் மைண்ட் கேம்ஸ் எனப்படும் மனதளவில் விளையாடுவதில் கில்லாடி என்பார்கள். அந்த வகையில் ஏற்கனவே கிட்டத்தட்ட வெற்றி உறுதியான மமதையில் நேரத்தை தாமதப்படுத்தி அஷ்வின் போட நினைத்த சிறிய திட்டத்தை உடைப்பதற்காகவே அவரை அலைக்கழிப்பது போல் லபுஸ்ஷேன் நடந்து கொண்டதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement