IND vs AUS : இந்திய அணிக்கெதிரான இந்த அற்புதமான வெற்றிக்கு காரணம் இதுதான் – ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி

Steve Smith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி மார்ச் ஒன்றாம் தேதி துவங்கிய இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்களை மட்டுமே குவித்தது.

IND vs AUS

- Advertisement -

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 197 ரன்களை குவிக்கவே 88 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியால் 163 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 76 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் எளிய இலக்கினை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 18.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 78 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சின் போது 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லையன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

AUS

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : முதல் நாள் நாங்கள் டாசில் தோல்வி அடைந்து பவுலிங் செய்ய வந்தபோது எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த நினைத்தோம். அதன்படி பந்துவீச்சாளர்களும் சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றியதால் இந்தியா முதல் இன்னிங்சின் போது அழுத்தத்திற்குள் வந்தது. முதல் இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர் குன்னுமேன் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

- Advertisement -

அதேபோன்று மற்ற பவுலர்களும் சரியான பங்களிப்பை அளித்ததால் எங்களால் முதல் இன்னிங்சில் இந்திய அணியை குறைவான ரன்களில் சுருட்ட முடிந்தது. அதேபோன்று பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா இந்த தொடர் முழுவதுமே எங்கள் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் மிகச் சிறப்பாக பந்து வீசியதாக நாங்கள் நினைக்கிறோம். நாதன் லையன் 8 விக்கெட்டை வீழ்த்தி எங்களுக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க : IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்திக்க காரணம் இதுதான் – ரோஹித் சர்மா வேதனை

ஒட்டுமொத்தமாகவே இந்த போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றிக்கு எங்களது பந்துவீச்சாளர்கள் தான் காரணம். இந்தியாவில் உள்ள ஆடுகளங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு கேப்டன்சி செய்வதில் மகிழ்ச்சி. இது போன்ற மைதானங்களில் விளையாடும் போது மைதானத்தின் தன்மையை கணித்து செயல்படு வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை உறுதி செய்ததில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement