IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்திக்க காரணம் இதுதான் – ரோஹித் சர்மா வேதனை

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியானது மார்ச் 1-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியானது 109 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 197 ரன்களை குவித்தது. பின்னர் 88 ரன்கள் பின்தங்கிய நிலையிலுடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியானது 163 ரன்கள் ஆட்டம் இழந்ததால் 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.

IND vs AUS

- Advertisement -

மிகவும் எளிய இலக்கினை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது எளிதாக இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து 18.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 78 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றதுடன் இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் பின்தங்கி இருந்தாலும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இது போன்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நாம் தோற்கும் போது பல விடயங்கள் நமக்கு சரியாக அமையவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் முதல் இன்னிங்சின் போது சரியாக பேட்டிங் செய்யவில்லை.

IND vs AUS Siraj SMith

முதலில் பேட்டிங் செய்தால் போதுமான அளவு ரன்களை குவிக்க வேண்டும். ஆனால் நாங்கள் ஃபர்ஸ்ட் இன்னிங்ஸில் மிகவும் குறைவான ரன்களை குவித்து விட்டோம். அதோடு இரண்டாவது இன்னிங்ஸின்போது 90 ரன்கள் வரை பின்னிலையில் இருந்தபோது அப்போதாவது சுதாரித்து விளையாடிருக்க வேண்டும். ஆனால் மீண்டும் எங்களால் இரண்டாவது இன்னிங்சிலும் பேட்டிங் செய்ய முடியாமல் போனது.

- Advertisement -

75 ரன்கள் மட்டுமே இலக்காக வைத்துக் கொண்டு எதிரணியை அவ்வளவு சுலபமாக நிறுத்தி விட முடியாது. நாங்கள் தற்போதைக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி குறித்து யோசிக்கவில்லை. கடைசி போட்டியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டியுள்ளது. இது போன்ற பேட்டிங்கிற்கு சவாலான மைதானங்களில் விளையாடும் போது தைரியமாக விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : IND vs AUS : எளிதாக வென்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி – சொதப்பிய இந்தியா செய்ய வேண்டியது இதோ

அப்போதுதான் பவுலர்களால் அவர்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக நாதன் லையன் எங்களுக்கு மிகவும் சவாலை அளித்தார். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்று தான் நினைப்பதாக ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement